பக்கம் எண் :

 வருணனை வழி வேண்டு படலம் 351

கூடும்   வெம்பொறிக்   கொழுங்கனல்-   வெப்பமான
தீப்பொறிகளோடு    கூடிய    கொழுந்துவிட்டெரியும்  நெருப்பு;
தொடர்ந்தெனக்    கொளுந்த  -    தொடர்ந்து     பற்றிக்
கொளுத்துவதாலே;   ஓடும்   மேகங்கள்   பொரிந்து இடை
உதிர்ந்தன
- வானத்திலே ஓடுகின்ற மேகங்கள் பொரிந்து போய்
இடையே உதிர்ந்தன; அளக்கர்கோடு  தீந்து எழ  - கடல் நீர்
கொதித்து  கடலெல்லையைக்  கடந்து  மேலே  பரந்து  செல்ல;
கொழும்புகைப் பிழம்பு மீக்கொள-  அதனாலே  கொழுவிய
புகைத் தொகுதி மேல் சென்று சூழ; உம்பர் ஆடும் மங்கையர்-
விண்ணுலகத்திலே நாட்டியமாடும் நடன மங்கையரின்; கருங்குழல்
விளர்த்தன
- கரிய கூந்தலும் வெளிறிப் போயின.
 

வெம்பொறிகூடும் என இயைக்க.
 

(22)
 

6611.

நிமிர்ந்த செஞ் சரம் நிறம்தொறும் படுதலும்,

நெய்த்தோர்

உமிழ்ந்து உலந்தன மகரங்கள் உலப்பு இல; உருவத்

 

துமிந்த துண்டமும் பல படத் துரந்தன, தொடர்ந்து

 

திமிங்கிலங்களும் திமிங்கிலகிலங்களும் சிதறி.
 

நிமிர்ந்த   செஞ்சரம்-  வளைதலில்லாது   நிமிர்ந்துள்ள
செம்மையான  அம்புகள்;  நிறந்தொறும் படுதலும்-  மார்புகள்
தோறும் சென்று படுதலால்; நெய்த்தோர் உமிழ்ந்து உலந்தன
- இரத்தம்   சிந்தி   இறந்தனவான; மகரங்கள்    உலப்பில-
சுறாமீன்கள் அளவில்லாதனவாம்; உருவத் துமிந்த துண்டமும்-
இராமபாணம்       ஊடுருவித்துண்டித்த        துண்டங்களும்;
பலபடத்துரந்தன - பலவாக எங்கும்  சிதறலாயின; தொடர்ந்து
திமிங்கிலங்களும் திமிங்கில கிலங்களும் சிதறி
- தொடர்ந்து
அம்புகள்  பாய்வதால்  திமிங்கிலங்களும்,  திமிங்கிலகிலங்களும்
சிதறி (எங்கும் துண்டுகள் பரந்தன).
 

செஞ்சரம் - செம்மையான  அம்புகள்;  தீயை  உமிழ்தலால்
சிவந்த அம்பு  எனினும்   அமையும்.  நெய்த்தோர் -  இரத்தம்.
உலத்தல்  -  வற்றுதலுமாம்.  உலப்பில -  அளவற்றன.  சிதறித்
துரந்தன என இயைந்து பொருள் படும். திமிங்கிலம் - மீன்களை
விழுங்கும். ஒருவகைப் பெரியமீன். அதையும் தின்னவல்ல மிகப்
பெரியமீன்  திமிங்கில   கிலம்  ஓசனை  உலப்பிலாத   உடம்பு
அமைந்து   உடைய  என்னத்  தேசமும்   நூலும்   சொல்லும்
திமிங்கிலகிலங்கள்' என்று (4777) முன்பும் திமிங்கிலகிலம்