குறிக்கப்பட்டது. மிகப் பெரிய பேச்சிலும் நூல்களிலும் பதிவாகியுள்ளன என்பது அந்தப் பாடலின் செய்தி; நேரிலே கண்டவரில்லை என்பது குறிப்புப் போலும். |
(23) |
6612. | நீறு மீச்செல, நெருப்பு எழ, பொருப்பு எலாம் எரிய, |
| நூறும் ஆயிர கோடியும் கடுங் கணை நுழைய, |
| ஆறு கீழ்ப் பட, அளறு பட்டு அழுந்திய அளக்கர் |
| சேறு தீய்ந்து எழ, காந்தின சேடன்தன் சிரங்கள். |
| |
நூறும் ஆயிர கோடியும் கடுங்கணை நுழைய - நூறும், ஆயிரமும் கோடியுமாக விரைந்து பாயும் அம்புகள் கடலில் நுழைவதால்; நீறு மீச்செல நெருப்பெழ- சாம்பல் மேலே செல்லும்படி நெருப்பு மேலோங்கி எழுதலால்; பொருப் பெலாம் எரிய - மலைகளெல்லாம் தீப்பற்றி எரிந்தன; ஆறு கீழ்ப்பட- அம்புகள் கீழேயும் நுழைவதால் பாதாளத்துக்கு வழி உண்டாக; அளறுபட்டு அழுந்திய அளக்கர் - கீழே சேறுபட்டு அழுந்தியிருந்த கடல்; சேறு தீய்ந்து எழ- சேறும் தீய்ந்து கருகி மேலே எழுதலால்; காந்தின சேடன்தன் சிரங்கள்- பூமியைச் சுமக்கும் ஆதிசேடனுடைய ஆயிரம் தலைகளும் வெதும்பின. |
கருங்கணை - விரைந்து செல்லும் அம்புகள் ஆயிரம் தலைகளும் வெதும்பின. மீச்செய - மேலே செல்ல. அளறு - சேறு. சேடன் - ஆதிசேடன். |
(24) |
6613. | மொய்த்த மீன் குலம் முதல் அற முருங்கின, |
| மொழியின் |
| பொய்த்த சான்றவன் குலம் என, பொரு கணை |
| எரிய; |
| உய்த்த கூம்புடை நெடுங் கலம் ஓடுவ கடுப்ப, |
| தைத்த அம்பொடும் திரிந்தன, தாலமீன் சாலம். |
| |
பொருகணை எரிய- இராமபிரானுடைய போர்த் தொழில் வல்ல அம்புகள் கொழுந்து விட்டு எரிவதால்; மொழியின் பொய்த்த சான்றவன் குலம் என- வழக்கில் பொய்ச் சாட்சி கூறியவன் குலத்தோடு அழிந்து படுவது போல; மொய்த்த மீன் குலம் முதல் அற முருங்கின- நெருங்கிய மீன் கூட்டமெல்லாம் அடியோடு அழியலாயின; தாலமீன் சாலம்- பனைமீன்களின் வரிசையானது; தைத்த அம்பொடு திரிந்தன- உடலில் தைத்த அம்போடு திரிவன; |