உய்த்த கூம்புடை நெடுங்கலம்- கடலில் செலுத்தப்பட்ட கூம்புகளை உடைய நெடிய மரக்கலங்கள்; ஓடுவ கடுப்ப- ஓடுவதை ஒத்திருந்தன. |
மொய்த்த - நெருங்கித் திரண்ட; இராமபிரானது அம்புகள் பட்டு எரிவதால் மீன்கள் எல்லாம் கூட்டம் கூட்டமாக அடியோடு இறந்து அழிந்தன என்பதற்கு வழக்கில் பொய்ச் சாட்சி கூறியவன் குலத்தோடு அழிவதைக் கூறினார். பொய்க்கரி கூறுவதன் தீமையை இங்கு எடுத்தியம்புவது நினைவு கூர்தற்குரியது. சாலம் - வரிசை. |
(25) |
6614. | சிந்தி ஓடிய குருதி வெங் கனலொடு செறிய, |
| அந்தி வானகம் கடுத்தது, அவ் அளப்ப அரும் |
| அளக்கர்; |
| பந்தி பந்திகளாய் நெடுங் கணை படர, |
| வெந்து தீந்தன, கரிந்தன, பொரிந்தன, சில மீன். |
| |
சிந்தி ஓடிய குருதி வெங்கனலொடு செறிய- அம்பு தைத்தலால் மீன் முதலியவற்றினிடமிருந்து சிந்தி ஓடிய இரத்தம் வெவ்விய நெருப்புடன் செறிவதால்; அந்தி வானகம் கடுத்தது- அந்தி வானத்தை ஒத்திருந்தது; அவ்வளப்படும் அளக்கர்- அந்த அளவிடமுடியாத கடல்; பந்தி பந்திகளாய்- வரிசை வரிசையாக; நெடுங்கணை படர - நீண்ட அம்புகள் பரந்து படர்ந்தமையால்; சிலமீன் வெந்து தீந்தன கரிந்தன பொரிந்தன- மீனினமெல்லாம் வெந்து, தீய்ந்து, கரிந்து பொரிந்து போயின. |
கடுத்தது - ஒத்திருந்தது. பந்தி - வரிசை அளக்கர் - கடல். கடல்மீது சிந்தி ஓடிய இரத்தத்தோடு, வெப்பமான நெருப்பும் செறிந்திருப்பதால் அந்தப் பெரிய கடல் முழுவதும் அந்திவானைப் போலக் காணப்பட்டது. பந்தி பந்தியாய் - அடுக்குத் தொடர். |
(26) |
6615. | வைய நாயகன் வடிக் கணை குடித்திட, வற்றி, |
| ஐய நீர் உடைத்தாய், மருங்கு அருங் கனல் மண்ட, |
| கை கலந்து எரி கருங் கடல் கார் அகல் கடுப்ப, |
| வெய்ய நெய்யிடை வேவன ஒத்தன, சில மீன். |
| |
வையநாயகன் வடிக்கணை குடித்திட - உலகின் நாயகனாகிய ராமபிரான் எய்த கூர்மையான அம்புகள் கடல் நீரைக் குடித்து விடுவதால்; வற்றி, ஐயநீர் உடைத்தாய்- கடல் தண்ணீர் வற்றிப் போக சிறிதளவு நீரே கடலில் இருக்க; மருங்கு அருங்கனல் மண்ட- |