பக்கங்களில் எல்லாம் அணைப்பதற்கரிய நெருப்புப் பற்றி எரிய; கைகலந்து எரி கருங்கடல்- எல்லாப் பக்கங்களிலும் நெருப்பு கலந்து எரியும் கருங்கடல்; கார் அகல் கடுப்ப- கரிய சட்டியான வாணலியை ஒத்திருக்க; வெய்ய நெய்யிடை வேவன ஒப்பன சிலமீன்- சிலமீன்கள் காய்ந்த நெய்யிலே வேகின்றதை ஒத்திருந்தன. |
கணை குடித்தது போக மிஞ்சியிருந்த சிறிதளவு நீர் "ஐயநீர்" எனப்பட்டது. மண்டுதல் - எரிதல். கை கலந்து - பக்களில் கலந்து. கார் அகல் - கருப்பு நிறமான வாணலி. கடுப்ப, ஒப்ப - உவமை உருபுகள். |
(27) |
6616. | குணிப்ப அருங் கொடும் பகழிகள் குருதி வாய் |
| மடுப்ப, |
| கணிப்ப அரும் புனல் கடையுறக் குடித்தலின், |
| காந்தும் |
| மணிப் பருந் தடங் குப்பைகள் மறி கடல் வெந்து, |
| தணிப்ப அருந் தழல் சொரிந்தன போன்றன, தயங்கி. |
| |
குணிப்ப அருங் கொடும் பகழிகள்- அளவிட முடியாத கொடிய அம்புகள்; குருதிவாய் மடுப்ப- இரத்தம் தோய்ந்த தமது வாய் வழியே சென்று சேருமாறு; கணிப்பரும் புனல்- அளவிடமுடியாத கடல் நீரை; கடையுறக் குடித்தலில் - கடைபோகக் குடிப்பதாலே; காந்தும் மணிப் பருந்தடங்குப்பைகள்- கடலின் கீழே ஒளிவீசும் பெரிய, விசாலமான மணிகளின் குவியல்கள்; மறிகடல் வெந்து- அலைமறியும் கடல் எல்லாம் வெந்து போக; தணிப்பருந்தழல் சொரிந்தன போன்றன தயங்கி- தணிக்க இயலாத தணல் வெப்பம் சொரியக் கிடப்பது போல விளங்கிக் காணப்பட்டன. |
குணிப்ப, கணிப்ப - அளவு என்னும் பொருள் கொண்ட சொற்களாகும் கடையுற - கடைபோக (முழுதும்). குப்பை - குவியல். |
(28) |
6617. | எங்கும் வெள்ளிடை மடுத்தலின், இழுதுடை இன |
| மீன் |
| சங்கமும், கறி கிழங்கு என, இடை இடை தழுவி, |
| அங்கம் வெந்து பேர் அளற்றிடை அடுக்கிய கிடந்த; |
| பொங்கு நல் நெடும் புனல் அறப் பொரித்தன |
| போன்ற. |