பக்கம் எண் :

 வருணனை வழி வேண்டு படலம் 355

எங்கும்  வெள்ளிடை மடுத்தலின்-  அம்புகள்  எங்கும்
தண்ணீர்  இல்லாது  வெற்றிடமாக்கி   விட்டதால்;   இழுதுடை
இனமீன் சங்கமும்
- நிணத்தை உடைய மீன்களும்  சங்குகளும்;
கறி, கிழங்கென இடைஇடை தழுவி- காய்களும், கிழங்குகளும்
இடையே கிடந்தது போல் இடையே  கலந்து பொருந்தி; அங்கம்
வெந்து
-  தம்முடல்  முழுதும்   வெந்து   போய்; அளற்றிடை
அடுக்கிய  கிடந்த
-  சேற்றிலே  அடுக்கடுக்காகக் கிடந்தவை;
பொங்கும் நல்நெடும்  புனலற- பொங்கி  எழும் நிறைந்த நீர்
முழுதும்   வற்றிப்  போக; பொரிந்தன  போன்ற-  பொரிந்து
கிடந்தன போன்றிருந்தன.
 

வெள்ளிடை -  வெற்றிடம்.  இழுது  -  நிணம்  (கொழுப்பு).
இனமீன் சங்கமும்' என்பது மீனும் சங்கமும் ஆம்.
 

(29)
 

6618.

அதிரும் வெங் கணை ஒன்றை ஒன்று அடர்ந்து எரி

உய்ப்ப

வெதிரின் வல் நெடுங் கான் என வெந்தன, மீனம்;

பொதுவின் மன்னுயிர்க் குலங்களும் துணிந்தன

பொழிந்த

உதிரமும் கடல் திரைகளும் பொருவன, ஒருபால்.
 

அதிரும் வெங்கணை- அதிர்ந்து வருகின்ற வெம்மைமிக்க
அம்புகள்; ஒன்றை ஒன்று அடர்ந்து எரி உய்ப்ப- ஒன்றுடன்
ஒன்று  மோதுவதால்  நெருப்பை   உமிழ;   வெதிரின்  வல்
நெடுங்கான்என
- வலிய, பெரிய மூங்கில்காடு தீப்பற்றி எரிவது
போல;  மீனினம்  வெந்தன-  மீன்  கூட்டமெல்லாம்  தீயில்
வெந்தன;  பொதுவின்  மன்னுயிர்க்  குலங்களும்-  கடலில்
வாழுகின்ற பொதுவான உயிரினங்களின் குழுக்களும்; துணிந்தன
பொழிந்த
- அம்புகளால்  துணிக்கப்பட,  அதனால்  பொழிந்த;
உதிரமும் கடல் திரைகளும்- இரத்தமும் கடல் அலைகளும்;
ஒரு பால் பொருவன- ஒரு பக்கம் மோதுவன வாயின.
 

அதிர்தல் - முழங்குதல். அடர்தல் - நெருங்குதல் (மோதுதல்).
 

(30)
 

6619.

அண்ணல் வெங் கணை அறுத்திட, தெறித்து

எழுந்து அளக்கர்ப்

பண்ணை வெம் புனல் படப் பட, நெருப்பொடும்

பற்றி,