பக்கம் எண் :

356யுத்த காண்டம் 

மண்ணில் வேர் உறப் பற்றிய நெடு மரம், மற்றும்,

 

எண்ணெய் தோய்ந்தென எரிந்தன, கிரிக் குலம்

எல்லாம்.

 

அண்ணல் வெங்கணை  அறுத்திட-  இராமபிரான்  எய்த
கொடிய   அம்புகள்   அறுப்பதாலே;    தெறித்து   எழுந்து
அளக்கர்ப்  பண்ணைவெம்புனல்
- மேலே  தெறித்து எழுந்த
கடலாகிய நீர் நிலையின் கொதிக்கும்  நீர்;   மண்ணின்  வேர்
உறப்  பற்றிய  நெடுமரம்
-  மண்ணிலே  வேரூன்றி  வளர்ந்த
நீண்ட  மரங்களும்; மற்றும்  கிரிக்குலம்  எல்லாம்- மற்றும்
மலைக்  கூட்டங்கள்  எல்லாமும்;  எண்ணெய்  தோய்ந்தென
எரிந்தன
- எண்ணெயில் தோய்ந்தன போல எரியலாயின.
 

அளக்கர்ப்பண்ணை  -  கடலாகிய  நீர்  நிலை.  நெருப்பை
அணைப்பது  நீர் அந்த  நீரும் இராமன் அம்புகளால் கொதித்து,
அந்த  நெருப்புக்கு  எண்ணெய்  போல  எரிவதற்கு  உதவியது
என்பது  கருத்து. வெம்புனல்  பட, நெருப்பொடு பற்றி நெடுமரம்,
கிரிக்குலம் எரிந்தன என இயையும்.
 

(31)
 

6620.

தெய்வ நாயகன் தெரி கணை, 'திசை முகத்து

ஒருவன்

வைவு இது ஆம்' என, பிழைப்பு இல மனத்தினும்

கடுக,

வெய்ய அந் நெருப்பு இடை இடை பொறித்து எழ,

வெறி நீர்ப்

பொய்கை தாமரை பூத்தெனப் பொலிந்தது, புணரி.
 

தெய்வ நாயகன் தெரிகணை- தெய்வங்களுக்   கெல்லாம்
தலைவனான இராமபிரான் தெரிந்தெடுத்து எய்த அம்புகள்; திசை
முகத்து ஒருவன் வைவு  இதாமென
- பிரமதேவன்  கொடுத்த
சாபம்  இது என்று  கூறும்படி; பிழைப்பில மனத்தினும் கடுக-
தவறுதலின்றி   மனத்தைவிட   வேகமாகச்   செல்ல;   வெய்ய
அந்நெருப்பு இடையிடை பொறித்து எழ
- அதனால் வெம்மை
நிறைந்த நெருப்பு இடையிடையே  தீப்பொறிகளுடன் மேலே எழ;
புணரி-  அக்கடல்; வெறி   நீர்ப்  பொய்கை- மணம்  மிக்க
நீரையுடைய  பொய்கை;   தாமரை  பூத்தெனப்  பொலிந்தது-
தாமரை மலர்களைப் பூத்தது போலப் பொலிந்தது.