தெரிகணை - தெரிந்தெடுத்து எய்த அம்புகள். திசை முகத்தொருவன் - பிரமன். வைவு - சாபம். பிரமனின் சாபம் தவறாது சென்று சபிக்கப்பட்டவர்களை, அதன் பயனைத் துய்க்கச் செய்யுமாதலின் - இலக்கை நோக்கித் தவறாது சென்று பாயும் அம்புகளை 'வைவு இதாம் என' என்றார். தாமரை மலர்ந்த பொய்கை உவமானம் நெருப்புப் பற்றி எரியும் கடல் உவமேயம். கடுக - விரைந்து செல்ல. |
(32) |
6621. | செப்பின், மேலவர் சீறினும் அது சிறப்பு ஆதல் |
| தப்புமே? அது கண்டனம், உவரியில்; 'தணியா |
| உப்பு வேலை' என்று உலகு உறு பெரும் பழி நீங்கி, |
| அப்பு வேலையாய் நிறைந்தது; குறைந்ததோ, |
| அளக்கர்? |
| |
செப்பின்- சொல்லுவோமானால்; மேலவர் சீறினும்- மேலோர்கள் வெகுண்டாலும்; அது சிறப்பாதல் தப்புமே- அது நன்மையாவது தவறுமோ? (தவறாது); அது கண்டனம்- அதனை இப்போது நேரிலே பார்த்தோம்; உவரியில் தணியா உப்பு வேலை என்று- கடலில் குறையாத உப்பு நிறைந்திருத்தலால் 'உப்புக்கடல்' என்று; உலகு உறு பெரும் பழி நீங்கி- உலகம் இது வரை கூறிய பெரியபழி இன்று நீங்கி; அப்பு வேலையாய் நிறைந்தது- அம்புக் கடலாக நிறைந்திருந்தது; அளக்கர் குறைந்ததோ- கடல் குறைவுற்றதோ; (இல்லை) |
மேலவர் - கல்வி அறிவு நிரம்பிய மேலோர். 'உவரியில் அது கண்டனம் என இயைத்துப் பொருள் கூறினும் அமையும். அப்பு - நீர் அம்பு என்பது வலிந்து அப்பு என ஆயிற்று. இரு பொருள் படக் கூறியதோர் நயம். நல்லோர் சினந்தாலும் நன்மை உண்டு என்பதைக் கடலால் தெரிந்து கொண்டோம் என்பது கருத்து. |
(33) |
6622. | தாரை உண்ட பேர் அண்டங்கள் அடங்கலும் தானே |
| வாரி உண்டு அருள் செய்தவற்கு இது ஒரு |
| வலியோ?- |
| பாரை உண்பது படர் புனல்; அப் பெரும் பரவை |
| நீரை உண்பது நெருப்பு எனும் அப் பொருள் |
| நிறுத்தான்! |
| |
தாரை உண்ட பேரண்டங்கள் அடங்கலும்- ஒன்றன் மேல் ஒன்றாக ஒழுங்குபட அமைந்துள்ள பெரிய அண்டங்கள் |