அனைத்தையும்; வாரி உண்டு அருள் செய்தவற்கு- ஊழிக் காலத்திலே அவை அழியாத படி அண்டங்களை எல்லாம் வாரி உண்டு காத்து அருள் செய்தவனாகிய எம்பெருமானுக்கு; இது ஒரு வலியோ-கடல் நீரை வற்றச் செய்த இது ஒரு வலிமையோ; பாரை உண்பது படர்புனல் - நிலத்தை உண்பது நிறைந்து பரவும் நீரான கடல்; அப்பெரும் பரவை நீரை-அந்தப் பெரிய கடலில் உள்ள தண்ணீரை; உண்பது நெருப்பு- உண்ணும் வலிமை உடையது நெருப்பு; எனும் அப்பொருள் நிறுத்தான்- என்று கூறும் அந்தப் பொருளை நிலை நாட்டி விட்டான். |
தாரை - ஒழுங்கு. அவையனைத்தும் ஒன்றின் மேல் ஒன்றாக ஒழுங்குற இருப்பதால் 'தாரையுண்ட பேரண்டங்கள்' என்றார். அடங்கலும் - முற்றிலும் (எல்லாமும்). அருள் செய்தவனுக்கு இது ஒரு வலிமையோ (அல்ல) என்றார் 'நிலத்தை நீர் உண்ணும்' நீரை நெருப்புண்ணும் நெருப்பைக் காற்று உண்ணும் காற்று விசும்பிலடங்கும்' என்பது சமயநூல் கூறும் உண்மை 'அந்தப் பொருளை நிலை நாட்டி விட்டான்' என, வியந்து கூறுவது அறிந்து மகிழ்தற்குரியது. |
(34) |
கலிவிருத்தம் |
6623. | மங்கலம் பொருந்திய தவத்து மா தவர், |
| கங்குலும் பகலும் அக் கடலுள் வைகுவார், |
| அங்கம் வெந்திலர், அவன் அடிகள் எண்ணலால்; |
| பொங்கு வெங் கனல் எனும் புனலில் போயினார். |
| |
மங்கலம் பொருந்திய தவத்து மாதவர் - நன்மை பொருந்தியதாகிய சிறந்த தவத்தைச் செய்யும் மாமுனிவர்கள்; கங்குலும் பகலும் அக்கடலுள் வைகுவார்- இரவும், பகலும் எப்போதும் அந்தக் கடலிலே தங்கியிருப்பவர்கள்; அங்கம் வெந்திலர்- சுடுகணைகளாலே உடல் வேகப் பெற்றிலர்; அவன் அடிகள் எண்ணலால்- அப்பரமனுடைய திருவடிகளையே எப்போதும் எண்ணியிருப்பவர்களாதலால்; பொங்கு வெங்கனல் எனும்- பொங்கி எரியும் வெம்மைமிக்க நெருப்பு என்று கூறப்படும்; புனலில் போயினார்- நீரிலே செல்லலாயினர். |
தவத்தால் எல்லா நன்மைகளையும் எய்தலாகும் என்பதால் தவமுனிவர்களை 'மங்கலம் பொருந்திய தவத்து மாதவர்' என்றார் நீரிலும் நெருப்பிலும் நின்று தவம் செய்வது போலவே முனிவர்கள் கடலுள்ளும் தங்கித்தவம் செய்பவர் போலும். இராமன் அம்புகள் |