கடலை வற்றச் செய்து - மீனினங்கள் வெந்து கருகச் செய்த போதும் கடலுள் தவம் செய்வோர் அங்கம் வெந்திலர் என்றார்; அதற்குக் காரணம் கூறுபவரைப்போல "அவன் அடிகள் எண்ணலால்" கனல் என்னும் பெயர் கொண்ட புனலில் போயினார்' என்றார். பரமன் திருவடிகளையே தியானித்திருந்த அம்முனிவர்களை அம்பின் வெப்பம் தாக்கவில்லை. கனல் புனலாயிற்று என்ற நயம், கருதி மகிழ்தற்குரியது. |
(35) |
6624. | தென் திசை, குட திசை, முதல திக்கு எலாம் |
| துன்றிய பெரும் புகைப் படலம் சுற்றலால், |
| கன்றிய நிறத்தன கதிரவன் பரி |
| நின்றன; சென்றில; நெறியின் நீங்கின. |
| |
தென்திசை குட திசை முதல திக்கெலாம்- தெற்கு, மேற்கு முதலான எல்லாத் திசைகளிலும்; துன்றிய பெரும்புகைப்படலம் சுற்றலால் - நெருங்கிய நிறைந்த புகைப்படலம் சுற்றிச் சூழ்தலால்; கதிரவன் பரி- சூரியனுடைய தேரில் பூட்டிய குதிரைகள்; கன்றிய நிறத்தன- தமக்குரிய பச்சை நிறம் நீங்கிக் கன்றிய நிறத்தை உடையனவாய்; நின்றன சென்றில நெறியின் நீங்கின- வழி தவறிப் போய் மேற் கொண்டு செல்லாதனவாய் நின்றன. |
படலம் - திரட்சி. சூரியனுடைய குதிரைகள் பச்சை நிறம் உடையவை என்பது புராணக் கொள்கை. புகைப்படலத்தால் எதையும் பார்க்க இயலாமையின் வழிதவறியும், மேலே செல்ல இயலாமலும் நின்றன என்பதனை 'நின்றன சென்றில நெறியின் நீங்கின' என்றார்! நின்றன சென்றில - செல்ல இயலாது நின்றன என்பது பொருள். நிறத்தன, சென்றில இவை முற்றெச்சம்; நின்றன என்பது கொண்டு முடிந்தன. |
(36) |
6625. | 'பிறிந்தவர்க்கு உறு துயர் என்னும் பெற்றியோர் |
| அறிந்திருந்து, அறிந்திலர் அனையர் ஆம்' என, |
| செறிந்த தம் பெடைகளைத் தேடி, தீக் கொள, |
| மறிந்தன, கரிந்தன-வானப் புள் எலாம். |
| |
பிறிந்தவர்க்கு உறு துயர்- பிரிந்து வாழ்பவருக்கு உற்ற துன்பம்; என்னும் பெற்றி- என்னும் தன்மையை; அறிந்திருந்து- அத்துன்பத்தை அறிந்திருந்தாலும்; அறிந்திலர் அனையர் ஆம்என- அறியாதவரைப் போன்றவராவர்; செறிந்த தம் பெடைகளைத் தேடி- நிறைந்த தம் பெண் பறவைகளைத் தேடி வந்து; தீக்கொள |