பக்கம் எண் :

 வருணனை வழி வேண்டு படலம் 363

6631.

தா நெடுந் தீமைகள் உடைய தன்மையார்,

மா நெடுங் கடலிடை மறைந்து வைகுவார்,

தூ நெடுங் குருதி வேல் அவுணர், துஞ்சினார்;

மீன் நெடுங் கிரி என மிதந்து, வீங்கினார்.
 

தூ  நெடுங் குருதி  வேல் அவுணர்- தசையோடு கூடிய,
இரத்தம்  தோய்ந்த  நீண்ட  வேலையுடைய   அவுணர்கள்; தா
நெடும்  தீமைகள்  உடைய   தன்மையார்
-   துயர்   தரும்
பெருந்தீமைகள் கொண்ட பண்புடையவர் என்பதால்; மா நெடுங்
கடலிடை  மறைந்து  வைகுவார்
-  பெரிய  நீண்ட கடலிலே
மறைந்து  வாழ்கின்றவர்கள்; துஞ்சினார்-  இராமபிரானுடைய
அம்புகளின்       வெம்மையால்     உயிர்துறந்தார்கள்;    மீ
நெடுங்கிரியென
-  கடலின் மீது  கிடந்த மலைகளைப் போல்;
மிதந்து வீங்கினார்- மிதந்து உடல் வீங்கலாயினர்.
 

தூ - தசை.  தசையும்,  இரத்தமும்  கொண்ட  வேலை 'தூ
நெடுங்குருதிவேல்'  என்றார்.   தா  -  வருத்தம்,  துயரம்.  மா
நெடுங்கடல் - பெரியகடல்.
 

(43)
 

6632.

தசும்பு இடை விரிந்தன என்னும் தாரைய

பசும் பொனின் மானங்கள் உருகிப் பாய்ந்தன;

அசும்பு அற வறந்தன, வான ஆறு எலாம்;

விசும்பிடை விளங்கிய மீனும் வெந்தவே.
 

பசும் பொனின் மானங்கள்-  (இராமபிரான்  அம்புகளால்
எங்கும் தீ  எரிய)  வானத்தில்  செல்லும் பொன்னால் அமைந்த
விமானங்கள் எல்லாம்; உருகிப் பாய்ந்தன- தீயின் வெப்பத்தால்
உருகிப் பொழிந்தவை; தசும்பிடை விரிந்தன என்னும் தாரைய
- நீர்க்குடங்கள்   உடைந்தால்   நீர்தாரைதாரையாய்  ஒழுகுவது
போல் இருந்தன; வான ஆறெலாம்- விண்ணுலகிலுள்ள ஆகாய
கங்கை முதலான  ஆறுகள்; அசும்பறவறந்தன  - ஈரம்  சிறிது
மின்றி வறண்டு போயின; விசும்பிடை விளங்கிய-ஆகாயத்திலே
ஒளிர்ந்த; மீனும் வெந்தவே- விண்மீன்களும் வெந்தன.
 

மானம்  -  விமானம்.  தசும்பு  -  நீர்க்குடம்.  வானயாறு -
ஆகாய கங்கை. அசும்பு. நீர்க்கசிவு (ஈரம்). மீன் - விண்மீன்.
 

(44)
 

6633.

செறிவுறு செம்மைய, தீயை ஓம்புவ,

நெறியுறு செலவின, தவத்தின் நீண்டன,