பக்கம் எண் :

366யுத்த காண்டம் 

வாழ இயலாதவை ஆயின; நீரிடைப்புகும்- நிலம் வெப்பத்தால்
சூடாகத்   தண்ணீருக்கிடையே  செல்லும்;  அதின்  நெருப்பு
நன்றெனா
- அதைவிட  நெருப்பே  நல்லது என்று; பாரிடைக்
குதித்தன பதைக்கும் மெய்யன
- பதை பதைக்கும் உடம்பினை
உடையனவாய் நீரிலிருந்து தரைக்குக் குதித்தன.
 

பேருடை - பெருமையுடைய. அதின் - அதைவிட மெய்யன
- உடம்பை உடையன.
 

(48)
 

6637.

சுருள் கடல் திரைகளைத் தொலைய உண்டு, அனல்

பருகிடப் புனல் இல பகழி, பாரிடம்

மருள் கொளப் படர்வன, நாகர் வைப்பையும்

 

இருள் கெடச் சென்றன, இரவி போல்வன.
 

சுருள்   கடல்   திரைகளைத்   தொலைய   உண்டு-
இராமபிரான் எய்த அம்புகள் சுருண்டு விழும் கடல் அலைகள்
அழியுமாறு அவற்றை உண்டு  பின்; அனல்  பருகிடப் புனல்
இலபகழி
   -   நெருப்பு   உண்பதற்கு   எங்கும்   தண்ணீர்
இல்லாமையால்  அவ்வம்புகள்;  பாரிடம்  மருள்   கொளப்
படர்வன
-  நிலம்  மருளும்படி  எங்கும்  செல்வனவாய்ப்பின்;
இரவி  போல்வன-  சூரியனைப் போன்ற ஒளி உடையனவாய்;
நாகர் வைப்பையும்-  நாகர்கள்  வாழும்  நாக உலகத்தையும்;
இருள்  கெடச்   சென்றன-   அங்கு   இருள்   கெடும்படி
சென்றடைந்தன.
 

சுருள்கடல் - சுருண்டு விழும் அலைகளை  உடைய கடல்.
தொலைய - அழிய. நகர் வைப்பு - நாகர் உலகம்.
 

(49)
 

6638.

கரும் புறக் கடல்களோடு உலகம் காய்ச்சிய

இரும்பு உறச் செல்வன, இழிவ, கீழுற

 

அரும் புறத்து அண்டமும் உருவி, அப் புறம்

பெரும் புறக் கடலையும் தொடர்ந்து பின் செல்வ.
 

கரும்புறக்    கடல்களோடு  -   கறுத்துத்   தோன்றும்
மேற்புறத்தைக்  கொண்ட  கடல்களோடு;  உலகம்  காய்ச்சிய
இரும்புறச் செல்வன
- உலகமும்  காய்ச்சிய  இரும்பை ஒத்துச்
செல்லுவன;   இழிவ   கீழ்உற  -   கீழே    பொருந்துமாறு
இறங்குவனவாய்;   அரும்புறத்து   அண்டமும்   உருவி -
சக்கரவாளகிரிக்கு   அப்பால்    உள்ள   செல்லுதற்கரிய   புற
அண்டத்தையும் ஊடுருவிச் சென்று; அப்புறம்- அதற்கு அப்பால்