உள்ள; பெரும்புறக் கடலையும்- பெரும்புறக் கடலையும்; தொடர்ந்து பின் செல்வ- தொடர்ந்து பின் செல்வனவாயின. |
இலங்கைக்கு அருகில் எய்த அம்புகள் அப்பாலுள்ள புற அண்டத்தையும் கடந்து பெரும்புறக் கடலையும் தொடர்ந்து சென்றன என அம்பின் ஆற்றலைக் கூறினார். தீயால் கருகியதால் மேற்பரப்பு முழுதும் கறுத்துக் காணப்பட்ட கடலை 'கரும்புறக்கடல்' என்றார். கடல்களும், உலகமுமே' உருகிய இரும்பைப் போல் கீழே இறங்கின என்பதை 'காய்ச்சிய இரும்பு செல்வன இழிவ கீழூற' என்றார். |
(50) |
6639. | திடல் திறந்து உகு மணித் திரள்கள், சேண் நிலம் |
| உடல் திறந்து உதிரம் வந்து உகுவ போன்றன; |
| கடல் திறந்து எங்கணும் வற்ற, அக் கடல் |
| குடல் திறந்தன எனக் கிடந்த, கோள் அரா. |
| |
திடல் திறந்து உருமணித் திரள்கள்- கடல் நடுவே உள்ள திட்டுகள் எல்லாம் அம்புகளால் பிளக்கப்பட்டு அங்கிருந்து சிந்தும் மணித் திரள்கள் எல்லாம்; சேண் நிலம் உடல் திறந்து- பெரிய நிலம் உடல் பிளந்து, அதனால்; உதிரம் வந்து உகுவ போன்றன- இரத்தம் சிந்துவன போல இருந்தன; கடல் திறந்து எங்கணும் வற்ற- இராமபிரானுடைய அம்புகள் கடலைப் பிளத்தலால் எங்கும் நீரில்லாது வற்றிவிட; கோள் அரா- (அக்கடலின் அடியில் வாழ்ந்த) வலிய நீர்ப் பாம்புகள்; அக்கடல் குடல் திறந்தன எனக் கிடந்தன- அக்கடலின் குடல்கள் கிடந்தன போலக் காணப்பட்டன. |
திடல் - திட்டு. சேண் நிலம் - பரவிப் பெருகிய பூமி. கோள் அரா - குறிதப்பாமல் கொள்ளும் பாம்புகள். உருவ - சிந்த. |
(51) |
6640. | ஆழியின் புனல் அற, மணிகள் அட்டிய |
| பேழையின் பொலிந்தன, பரவை; பேர்வு அறப் |
| பூழையின் பொரு கணை உருவப் புக்கன, |
| மூழையின் பொலிந்தன, முரலும் வெள் வளை. |
| |
ஆழியின் புனல் அற - கடலின் நீர் அறவே வற்றிவிட; பரவை மணிகள் அட்டிய பேழையின் பொலிந்தன- அக்கடல் (அடியிலே மணிகள் கிடந்ததால்) மணிகள் சேர்த்து வைத்த பெட்டியைப் போல விளங்கியது; முரலும் வெள் வளை பேர்வற- (அக் கடலில் உள்ள) ஒலிக்கின்ற வெண்மை நிறமான சங்குகள் பெயர |