பக்கம் எண் :

368யுத்த காண்டம் 

இயலாதபடி;  பூழையில்  பொருகணை உருவ-  முகப்பிலுள்ள
துளைகளில்    அம்புகள்    உருவியிருப்பதால்;     மூழையின்
பொலிந்தன   புக்கன
-  அகப்பைகளைப்  போல  விளங்கிச்
சென்றன.
 

(52)
 

6641.

நின்று நூறாயிரம் பகழி நீட்டலால்,

குன்று நூறாயிரம் கோடி ஆயின;-

சென்று தேய்வு உறுவரோ, புலவர் சீறினால்?-

ஒன்று நூறு ஆயின, உவரி முத்து எல்லாம்.
 

நின்று நூறாயிரம்  பகழி   நீட்டலால்-  (இராமபிரான்
போர்க்கோலம்   கொண்டு)  நின்று   நூறாயிரம்   அம்புகளை
எய்தலால்; குன்று நூறாயிரம் கோடி ஆயின- கடலில் உள்ள
குன்றுகள்   எல்லாம்  நூறாயிரம்  கோடியாயின;   உவரிமுத்து
எலாம்
- கடலில் உள்ள முத்துக்கள் எல்லாம்; ஒன்று நூறாயின
-அம்பு பட்டு  ஒன்று   நூறாக   ஆயின;  புலவர்  சீறினால்-
அறிவுமிக்க சான்றோர்கள் சீறினாலும்; சென்று தேய்வுறுவரோ-
(சீற்றத்துக்கு   ஆளானவர்)   சென்று    தேய்வடைவார்களோ?
(மாட்டார்).
 

நின்று - போர்க்  கோலம்   கொண்டு   நின்று.   புலவர் -
சான்றோர்கள். இராமபிரான் நூறாயிரம் அம்புகளை எய்ய, கடலில்
உள்ள   குன்றுகள்   நூறாயிரம்  கோடிகளாயின; அம்பு  பட்டுச்
சிதைந்த  முத்துக்கள் ஒன்று  நூறாக  ஆயின.  அறிவின்  மிக்க
மேலோர்கள் சினந்தாலும், சினத்துக்கு ஆளானவர் தேய்ந்து கெட
மாட்டார்கள் என்ற பொதுப்  பொருளை குன்றும், முத்தும் ஒன்று
பல வாயின என்ற சிறப்புப் பொருளைக் கூறி விளக்குவதால் இது
வேற்றுப் பொருள் வைப்பணி.
 

(53)
 

6642.

சூடு பெற்று ஐயனே தொலைக்கும் மன்னுயிர்

வீடு பெற்றன; இடை மிடைந்த வேணுவின்

காடு பற்றிய பெருங் கனலின் கைபரந்து

ஓடி உற்றது நெருப்பு, உவரி நீர் எலாம்.

 

சூடு பெற்று  ஐயனே தொலைக்கும்-  சினத்தால்  சூடு
பெற்று உயிர்களுக்குத்  தலைவனான  இராமபிரானே அம்பெய்து
கொல்லும்;  மன்னுயிர்  வீடு   பெற்றன  -  நிலைத்துவாழும்
உயிரினங்கள் எல்லாம் அழிவில்லாத பேரின்ப வீட்டை  எய்தின;
இடைமிடைந்த வேணுவின்காடு- இடையிடையே நெருங்கியுள்ள
மூங்கில்கள் நிறைந்த காட்டில்; பற்றிய பெருங்கனலின்- பற்றி