எரியும் பெருந்தீயைப் போல; கை பரந்து ஓடி- (அம்பின் நெருப்பு) பக்கங்களிலெல்லாம் பரவிச் சென்று; உவரி நீ ரெலாம் உற்றது- கடல் நீரை அடைந்தது. |
'அம்பின் நெருப்பு கடல் நீரை அடைந்தது. மன்னுயிர் யாவும் வீடுபேறு எய்தின' என்பது கருத்து. இராமபிரானால் அம்பெய்து கொல்லப்பட்ட எல்லா உயிர்களும் 'வீடு பெற்றன' என்றார். வேணுவின்காடு - மூங்கில்காடு மூங்கில் காடு தீப்பிடித்தால் விரைவில் எங்கும் பரவுவது இயல்பு என்பதால் 'கனலின் கை பரந்தோடி' என்றார். |
(54) |
6643. | கால வான் கடுங் கணை சுற்றும் கவ்வலால், |
| நீல வான் துகிலினை நீக்கி, பூ நிறக் |
| கோல வான் களி நெடுங் கூறை சுற்றினாள் |
| போல, மா நிலமகள் பொலிந்து தோன்றினாள். |
| |
கால வான் கடுங்கணை- எமனுக் கொப்பான விரையும் அம்புகள்; சுற்றும் கவ்வலால்- கடல் முழுவதையும் கவ்விக் கொண்டதால்; மா நிலமகள்- பெரிய நிலமாகிய பூமித்தாய்; நீலவான் துகிலினை நீக்கி- தான் உடுத்திருந்த நீலவானம் போன்ற ஆடையை நீக்கிவிட்டு; பூ நிறக் கோல வான் களி நெடுங்கூறை- பூ வேலைப்பாடுகளோடு கூடிய செந்நிறமான புத்தாடையை; சுற்றினாள் போல- தனது உடம்பில் சுற்றிக் கொண்டவளைப் போல; பொலிந்து தோன்றினாள்- பொலிவுடன் காணப்பட்டாள். |
நீலநிறமான கடல் நீர் வறண்டு போய் எங்கும் ஒளி சிறந்த சிவந்த அம்புகளே காணப்படுவதால் நிலமகள் நீல ஆடையை நீக்கி ஒளி நிறைந்த செந்நிறமான ஆடையை அணிந்து பொலிந்து தோன்றியது போலக் காணப்பட்டாள் என்று கூறியது நயம் துகில் - பட்டாடை. கூறை - புத்தாடை. மணமகள் அணியும் ஆடையை 'கூறைப் புடவை' என்று கூறுவர். அது செந்நிறமுடையது. |
(55) |
6644. | கற்றவர் கற்றவர் உணர்வு காண்கிலாக் |
| கொற்றவன் படைக்கலம் குடித்த வேலை விட்டு, |
| உற்று உயிர் படைத்து எழுந்து ஓடல் உற்றதால், |
| மற்றொரு கடல் புக, வடவைத் தீஅரோ. |
| |
கற்றவர் கற்றவர் உணர்வு காண்கிலாக் கொற்றவன்- கற்றறிந்தவர்களுக்குள் கற்றவராய் விளங்கும் மேலோர்களின் |