பக்கம் எண் :

370யுத்த காண்டம் 

உணர்வும்கூட   காண   இயலாத  பெருமானாகிய   இராமனது;
படைக்கலம்  குடித்த   வேலை  விட்டு-  அம்புகள்   நீர்
முழுவதையும்  குடித்து விட்ட கடலை விட்டு விட்டு; வடவைத்
தீ
- கடல் மத்தியிலே வாழும்  வடவா முகாக்கினித்தீ; மற்றொரு
கடல் புக
- வேறு  ஒரு  கடலை  அடைவதற்காக; உற்று உயிர்
படைத்து எழுந்து
-  வலிமைபெற்று  உயிர்  கொண்டு எழுந்து;
ஓடல் உற்றதால்- ஓடத் தொடங்கியது.
 

கற்றறிந்த  ஞானிகளின்  உணர்வுக்கும்  எட்டாதவன் பரமன்
என்பதால் 'கற்றவர்  கற்றவர்  உணர்வு காண்கிலாக் கொற்றவன்'
என்றார். "எங்கள் நான் மறைக்கும் தேவர் அறிவுக்கும் பிறர்க்கும்
எட்டாச் செங்கண் மால்"  என்று (408)  முன்னும் கூறுவது ஒப்பு
நோக்கத்தக்கது. வடவைத் தீ   வாழும்   கடல்  நீரையெல்லாம்
இராமபிரானது   அம்புகள்  குடித்துவிட்டதால், வேறு கடலுக்குச்
செல்ல எழுந்து  ஓடலுற்றது. 'கற்றவர்  கற்றவர்' என  இருமுறை
கூறியது  'கற்றவருள்ளும்  பெரிது  கற்றவர்   என ஞானியரைக்'
குறித்தது.
 

(56)
 

6645.

வாழியர் உலகினை வளைத்து, வான் உறச்

சூழ் இரும் பெருஞ் சுடர்ப் பிழம்பு தோன்றலால்,

ஊழியின் உலகு எலாம் உண்ண ஓங்கிய

ஆழியின் பொலிந்தது, அவ் ஆழி, அன்ன நாள்.
 

உலகினை  வளைத்து  -  உலகத்தை   எல்லாம்   சுற்றி
வளைத்துக் கொண்டு; வான் உறச் சூழ் இரும் பெரும் சுடர்ப்
பிழம்பு
-  விண்ணை  அளாவிச்   சூழ்ந்த பெரிய தீயின் ஒளிப்
பிழம்பு எங்கும்; தோன்றலால்-  காணப்படுதலால்; அவ்வாழி-
அந்தக் கடல்; அன்ன  நாள்  ஊழியின் உலகெலாம் உண்ண
ஓங்கிய
-   அந்த   நாளிலே   ஊழிக்   காலத்தின்   முடிவில்
உலகனைத்தையும்  உண்ண  உயர்ந்த; ஆழியின்  பொலிந்தது-
ஊழிக் காலத்துப் பெருங் கடலைப் போல விளங்கியது.
 

வாழியர் - அசை, உலகை உண்ண  ஓங்கிய ஆழியால் ஊறு
நேருமோ என் அஞ்சி  வாழ்த்தினார் எனலுமாம். இரும்  பெரும்
சுடர்ப்  பிழம்பு  -  மிகப்  பெரிய ஒளிப் பிழம்பு  'இரும்பெரும்'
என்பது மீமிசைச்சொல்.
 

(57)
 

6646.

ஏனையர் என்ன வேறு உலகின் ஈண்டினார்-

ஆனவர் செய்தன அறைய வேண்டுமோ-