பக்கம் எண் :

372யுத்த காண்டம் 

6648.

மழைக் குலம் கதறின; வருணன் வாய் உலர்ந்து

அழைத்தனன்; உலகமும் அடைத்த, ஆறு எலாம்;

இழைத்தன நெடுந் திசை, யாதும் யார் இனிப்

பிழைப்பிலர் என்பது ஓர் பெரும் பயத்தினால்.
 

மழைக்குலம் கதறின- (இராமபிரான் சதுமுகன்  கணையை
ஏவ மேகக் கூட்டங்களெல்லாம்  கதறலாயின;  வருணன்  வாய்
உலர்ந்து அழைத்தனன்
- வருணன்  வாய் வறண்டு  கதறினான்;
உலகமும் ஆறெலாம் அடைத்த- உலகிலுள்ள ஆறுகளெல்லாம்
தூர்ந்து போயின; யார் இனிப் பிழைப்பவர் - சதுமுகன் படைக்குத்
தப்பி இனி யார் பிழைப்பார்கள்;என்பதோர் பெரும்பயத்தினால்
- என்பதொரு பெரிய பயத்தால் இவ்வளவு நடந்தது; நெடுந்திசை
இழைத்த
- நீண்ட திசைகளெல்லாம் நுணுகிப் பொடியாயின;
 

'பிழைப்பிலர்'  என்பதைவிட  'பிழைப்பவர்' என்று  பாடமே
ஏற்றது மழைக்குலம்  - மேகக்  கூட்டம்  உலர்ந்து -  வறண்டு
ஆறெலாம் - ஆறுகளெல்லாம் அடைத்த - தூர்ந்தன நெடுந்திசை
- நீண்ட திசைகள் இழைத்த - தேய்ந்து நொறுங்கின.
 

(60)
 

அறுசீர் ஆசிரிய விருத்தம்
 

6649.

அண்ட மூலத்துக்கு அப்பால் அழியும் கொதித்தது;

ஏழு

தெண் திரைக் கடலின் செய்கை செப்பி என்?

தேவன் சென்னிப்

பண்டை நாள் இருந்த கங்கை நங்கையும்

பதைத்தாள்; பார்ப்பான்

குண்டிகை இருந்த நீரும் குளுகுளு கொதித்தது

அன்றே.

 

அண்ட மூலத்துக்கு அப்பால் ஆழியும்  கொதித்தது-
அண்டத்தின்   அடிப்பகுதியில்  உள்ள  பெரும் புறக்  கடலும்
கொதித்தது (என்றால்); ஏழு தெண்திரைக்  கடலின் செய்கை
செப்பிஎன்
-  உலகத்திலுள்ள   தெளிந்த   அலைகளையுடைய
ஏழுகடல்களின்   செய்கையைச்   சொல்ல என்ன இருக்கிறது?;
தேவன்   சென்னிப்  பண்டை  நாள்   இருந்த  கங்கை
நங்கையும்  பதைத்தாள்
-  சிவபிரானுடைய சென்னியில் வெகு
காலமாக வீற்றிருந்த கங்கையாகிய பெண்ணும்  பதைபதைத்தாள்;
பார்ப்பான்