பக்கம் எண் :

 வருணனை வழி வேண்டு படலம் 373

குண்டிகை இருந்த நீரும்- அந்தணர் தலைவனான பிரமனது
கமண்டலத்தில் இருந்த  தண்ணீரும்; குளு  குளு கொதித்தது
அன்றே
- குளு குளு வென ஒலித்துக் கொதிக்கலாயிற்று.
 

அண்டமூலம்   -  அண்டங்களின்  அடிப்பகுதி.   ஆழி -
பெரும்புறக் கடல் தேவன் - சிவபெருமான். பார்ப்பான் - பிரமன்.
குண்டிகை -  கமண்டலம். 'குளு  குளு'  என்பது  ஒலிக்குறிப்பு;
'அனுகரணம்'  என்பர்.  'அன்றே'  அசை கங்கை நங்கை - இரு
பெயரொட்டுப் பண்புத்தொகை.
 

(61)
 

6650.

'இரக்கம் வந்து எதிர்ந்த காலத்து, உலகு எலாம்

ஈன்று, மீளக்

கரக்கும் நாயகனைத் தானும் உணர்ந்திலன்; சீற்றம்

கண்டும்,

வரக் கருதாது தாழ்த்த வருணனின் மாறு

கொண்டார்

அரக்கரே? அல்லர்' என்னா, அறிஞரும் அலக்கண்

உற்றார்.

 

இரக்கம்  வந்து    எதிர்ந்த    காலத்து  -   (தனது
திருவுள்ளத்திலே உயிர்களிடம்)  இரக்கம் தோன்றிய காலத்திலே;
உலகெலாம் ஈன்று மீளக் கரக்கும்  நாயகனை- உலகங்கள்
அனைத்தையும் படைத்து  மறுபடியும்  மறைத்துக் கொள்ளவல்ல
உலக  நாயகனை; தானும்  உணர்ந்திலன்- நாம் அறிந்திருத்தல்
போலத்தானும்    அறியாதவனாயினான்;    சீற்றம்   கண்டும்
வரக்கருதாது
-  இராமபிரானுடைய கோபத்தைப் பார்த்தபின்பும்
வருவதற்கு நினைக்காமல்; தாழ்த்த வருணனின்-காலம் தாழ்த்த
இந்த   வருணனைவிடவும்;   மாறு   கொண்டார் அரக்கரே
அல்லர் என்னா
-  இராமபிரானிடம் பகை  கொண்ட அவர்கள்
அரக்கர்  அல்லர் (இந்த  வருணன்தான் அரக்கன்) என்று கூறி;
அறிஞரும் அலக்கண் உற்றார்- மற்றத்தேவர்கள் எல்லோரும்
துன்பமுற்றார்கள்.
 

இறைவன் கருணையே  உருவானவன்  தனது  கருணையால்
உயிர்களைப்   படைத்தும்,    கரந்தும்,   பின்பு   மறைப்பதும்
செய்யவல்லவன்     திருமால்.    திருமாலின்    அவதாரமான
இராமபிரானை 'காக்கும்  நாயகன்'  என்றார்.  'தானும்'  உம்மை
எச்சவும்மை. அலக்கண்  -  துன்பம் 'மாறு கொண்ட அரக்கரே
நல்லர் என்பதும் ஒரு  பாடம் வருணனைவிடப் 'பகை கொண்ட
அரக்கர்களே நல்லவர்கள் என்பது அதன் பொருளாம்.
 

(62)