6651. | 'உற்று ஒரு தனியே, தானே, தன்கணே, உலகம் |
| எல்லாம் |
| பெற்றவன் முனியப் புக்கான்; நடு இனிப் பிழைப்பது |
| எங்ஙன்? |
| குற்றம் ஒன்று இலாதோர்மேலும் கோள் வரக் |
| குறுகும்' என்னா, |
| மற்றைய பூதம் எல்லாம், வருணனை வைத மாதோ. |
| |
உற்று ஒரு தனியே தானே- தான் ஒருவனே தனியாகப் பொருந்தியிருந்து; தன்கணே உலகம் எல்லாம் பெற்றவன்- தன்னிடமிருந்தே உலகங்கள் எல்லாவற்றையும் ஈன்றவன்; முனியப்புக்கான் - வெகுளத் தொடங்கினான்; நடு இனிப் பிழைப்பது எங்ஙன்? - இந்தக் கோபத்துக் கிடையே நாம் தப்பிப் பிழைப்பது எவ்வாறு; குற்றம் ஒன்று இலாதோர் மேலும்- குற்றம் எதுவும் செய்யாத நம்மீதும்; கோள் வரக் குறுகும் என்னா- தீங்கு வரக் கூடும் என்று கருதி; மற்றைய பூதம் எல்லாம் வருணனைவைத- மற்றைப் பூதங்கள் யாவும் வருணனைத் திட்டின. |
'பரமன் தனது சங்கல்பத்தால் தான் ஒருவனே தன்னிடமிருந்து உலகங்களைப் படைக்கிறான்' என்பது சமய நூற் கொள்கை. ஐம் பெரும் பூதங்களில் ஒன்று நீர் அதற்குரியவன் வருணன். அவன் செய்த தவறு காரணமாக மற்றைப் பூதங்களுக்கும் தீங்கு நேரக் கூடும் என, அவை வருணனை வைதன. கோள் - தீங்கு. |
(63) |
வருணன் தோன்றிப் பணிவுரை பகர்தல் |
6652. | எழு சுடர்ப் படலையோடும் இரும் புகை நிரம்பி |
| எங்கும் |
| வழி தெரிவு அறிவு இலாத நோக்கினன் வருணன் |
| என்பான், |
| அழுது அழி கண்ணன், அன்பால் உருகிய நெஞ்சன், |
| அஞ்சித் |
| தொழுது எழு கையன், நொய்தின் தோன்றினன், |
| வழுத்தும் சொல்லான். |
| |
எழு சுடர்ப் படலையோடும்- தொடர்ந்து எழுகின்ற தீச்சுடர்களின் திரள்களோடு; இரும்புகை நிரம்பி- நிறைந்த புகை நிரம்பி; எங்கும் வழி தெரிவு அறிவிலாத- எங்கும் வரும் வழியைத் தெரிந்து |