பக்கம் எண் :

 வருணனை வழி வேண்டு படலம் 375

கொள்ள   அறியாத;   நோக்கினன்   வருணன்  என்பான்-
நோக்கினை   உடையவனான  வருணன்   என்பவன்;  அழுது
அழிகண்ணன்
-  அழுது   அழுது   அழகிழந்த  கண்களை
உடையவனாகவும்;    அன்பால்    உருகிய    நெஞ்சன்-
இராமபிரானிடம் கொண்ட  அன்பினால்  உருகிய  உள்ளத்தை
உடையவனாகவும்;   அஞ்சித்   தொழுது   ஏழு  கையன்-
அஞ்சி,    தொழுதபடி      மேலே      உயர்த்தியகைகளை
உடையவனாகவும்; வழுத்தும் சொல்லான்- இராமபிரானைப்
போற்றிப் புகழும்  சொற்களை  உடையவனாகவும்; நொய்தின்
தோன்றினன்
-  விரைந்து (இராமபிரானுக்கு  எதிரிலே  வந்து)
தோன்றினான்.
 

எழுசுடர் - மேலும் மேலும்  எழுகின்ற தீச்சுடர்  படலை -
திரள்.   எங்கும்   புகை    நிறைந்திருத்தலால்    கண்களால்
பார்க்க  இயலவில்லை   நொய்தல்  -  விரைதல்.   வருணன்,
நோக்கினன்   கண்ணன்,    நெஞ்சன்,   கையன்   சொல்லன்
தோன்றினன் என இயையும்.
 

(64)
 

6653.

'நீ எனை நினைந்த தன்மை, நெடுங் கடல் முடிவில்

நின்றேன்

ஆயினேன் அறிந்திலேன்' என்று அண்ணலுக்கு

அயிர்ப்பு நீங்க,

காய் எரிப் படலை சூழ்ந்த கருங் கடல்

தரங்கத்தூடே,

தீயிடை நடப்பான் போல, செறி புனற்கு இறைவன்

சென்றான்.

 

நீ எனை  நினைந்த  தன்மை-  பெருமானே!  நீ  என்னை
வருமாறு நினைத்த தன்மையை; நெடுங்கடல் முடிவில் நின்றேன்
ஆயினேன்
-  இந்தப்  பெரிய  கடலில்  முடிவான   இடத்திலே
நின்றவனாகிய நான்; அறிந்திலேன் என்று - அறியாதவனானேன்
என்று   கூறிக்   கொண்டு;  அண்ணலுக்கு  அயிர்ப்பு  நீங்க-
இராமபிரானுக்கு ஐயம் தீரும்படி; காய் எரிப்படலை  சூழ்ந்த -
எரியும்  தீத்திரள்  எங்கும்  சூழ்ந்திருந்த; கருங்கடல் தரங்கத்து
ஊடே
-கரிய கடல் அலைகளுக்கு இடையிலே; தீயிடை நடப்பான்
போல
-  நெருப்புக்கு  இடையிலே  நடந்து வருபவனைப் போல்;
செறி புனற்கு இறைவன் சென்றான்-செறிந்த கடலுக்கு அரசனான
வருணன் வரலானான்.