எரிப்படலை - நெருப்புத்திரள். புனற்கு இறைவன், அண்ணலுக்கு அயிர்ப்பு நீங்க, நினைத்த தன்மை அறிந்திலேன் என்று சென்றான் என இயையும். எரியும் நெருப்புத் திரள் சூழ்ந்த அலைகளுக் கிடையே நடந்து வருபவன் 'தீயிடை நடப்பான் போல'ச் சென்றான் என்றார். "தீப் பொதிந்தாமென மிதிக்கும் செய்கையன்' என இராவணனைக் கூறுதல் (3340) ஒப்பிடத்தக்கது. "நாம் நினைத்தும் வராததேன்' என்று இராமன் கருதிய ஐயத்தைப் போக்க" 'நீ என்னை நினைத்ததை நான் நீண்ட இக் கடலின் முடிவில் நின்றதால் அறியாதவனானேன்" என்று கூறியபடி வருணன் வந்தான். | (65) | 6654. | வந்தனன் என்ப மன்னோ, மறி கடற்கு இறைவன்; | | வாயில் | | சிந்திய மொழியன், தீந்த சென்னியன், திகைத்த | | நெஞ்சன், | | வெந்து அழிந்து உருகும் மெய்யன், விழுப் புகைப் | | படலம் விம்ம, | | அந்தரின் அலமந்து, அஞ்சி, துயர் உழந்து, | | அலக்கண் உற்றான். | | | மறி கடற்கு இறைவன்- அலைகள் மடிந்து விழும் கடலுக்கு அரசனான வருணன்; வாயில் சிந்திய மொழியன்- வாயிலிருந்து சிந்தும் சொற்களை உடையவனாயும்; தீந்த சென்னியன்- தீயினால் தீய்ந்து போன தலையை உடையவனாயும்; திகைத்த நெஞ்சன்- திகைப்புண்ட மனத்தை உடையவனாகவும்; வெந்து அழிந்து உருகும் மெய்யன்- தீயால் வெந்து, உருவழிந்து, உருகுகின்ற உடலை உடையவனாகவும்; விழுப்புகைப் படலம் விம்ம - மிகுந்த புகைக் கூட்டம் எங்கும் நிறைந்து இருப்பதால்; அந்தரின் அலமந்து- கண் பார்வை இல்லாதவனைப் போலத் தடு மாறிக் கொண்டு; அஞ்சித்துயர் உழந்து- பயந்து கொண்டு துன்பத்தால் வருந்துபவனாய்; அலக்கண் உற்றான் வந்தனன்- வேதனைப்பட்டு வந்தான். | என்ப, மன்னோ - அசைச் சொற்கள். விழுப்புகை - மிகுந்த புகை படலம் - திரள் அந்தர் - குருடர் மறிகடற்கு இறைவன் - மொழியன் சென்னியன் - நெஞ்சன் அந்தரின் அலமந்து, வந்தனன் என்று இயையும். அலக்கண் - துன்பம். வருணன் கண்ணிருந்தும் காண இயலாதபடி புகை நிறைந்து சூழ்ந்திருந்தமையால் குருடர் போலத் துன்புற்றதை அலக்கண் உற்றான் என்று குறித்தார். முன்பும் வழி தெரிவு அறிவிலாத நோக்கினன் என்றார். அச்சத்தால் தன்னையறியாது சிதைந்து வந்த மொழியாதலின் |
|
|
|