சிந்திய மொழியன் என்றார். அச்ச மெய்ப்பாட்டுக்கு இப்பாடல் நல்ல எடுத்துக்காட்டு. |
(66) |
வருணன் இராமபிரானிடம் அடைக்கலம் வேண்டுதல் |
6655. | 'நவை அறும் உலகிற்கு எல்லாம் நாயக! நீயே சீறின், |
| கவயம் நின் சரணம் அல்லால், பிறிது ஒன்று |
| கண்டது உண்டோ? |
| இவை உனக்கு அரியவோதான்; எனக்கு என வலி |
| வேறு உண்டோ? |
| அவயம், நின் அவயம்!' என்னா, அடுத்து அடுத்து |
| அரற்றுகின்றான்: |
| |
நவை அறும் உலகிற்கு எல்லாம் நாயக- குற்ற மற்ற இவ்வுலகுக்கெல்லாம் தலைவனாக விளங்கும் பெருமானே!; நீயே சீறின்- (கருணைமிகுந்த மனத்தை உடைய) நீயே இவ்வாறு என் மீது சினம் கொண்டாயானால்; கவயம் நின் சரணமல்லால்- (எனக்குப் பாதுகாப்பான) கவசம் உனது பாதங்களே அல்லாமல்; பிறிது ஒன்று கண்டதுண்டோ - வேறு ஒன்றினை நான் பார்த்ததுண்டோ?; இவை உனக்கு அரியவோதான்- கடலுக்குத் தீயிட்டு, உலகை நடுங்கச் செய்யும் இச் செயல் உனக்கு அரியதொன்றே!; எனக்கு என வலி வேறுண்டோ- உனது வலிமையாய் வாழ்கின்ற எனக்கு எனத்தனியான வலிமை வேறுளதோ?; அவயம் நின் அவயம் என்னா- அடைக்கலம் உனக்கு அடைக்கலம் என்று; அடுத்து அடுத்து அரற்றுகின்றான்- அடுத்தடுத்துக் கூறி அரற்றுவானானான். |
நவை - குற்றம், கவயம், அவயம் என்பன கவசம், அபயம் என்பதன் திரிவுகள் 'தலைவனே சீறுவானாயின் அடிமைக்கு வேறு பாதுகாவல் ஏது' என்பான் 'நீயே சீறின் கவயம் பிறி தொன்றுண்டோ' என்றான். 'அபயம். அபயம்' என்று பலமுறை கூறி அரற்றினான் என்பதை 'அடுத்தடுத்து' என்றார். |
(67) |
6656. | 'ஆழி நீ; அனலும் நீயே; அல்லவை எல்லாம் நீயே; |
| ஊழி நீ; உலகும் நீயே; அவற்று உறை உயிரும் நீயே; |
| வாழியாய்! அடியேன் நின்னை மறப்பெனோ? |
| வயங்கு செந் தீச் |
| சூழுற உலைந்து போனேன்; காத்தருள்-சுருதி |
| மூர்த்தி! |