சுருதி மூர்த்தி-மறைகளின் வடிவாய்த் திகழ்பவனே!; ஆழிநீ அனலும் நீயே- இந்தக் கடலும் நீதான்; கடலை எரித்த தீயும் நீயே; அல்லவை எல்லாம் நீயே- இவையிரண்டுமல்லாத வானும், மண்ணும், விசும்பும் ஆகிய அனைத்தும் நீயே; ஊழிநீ உலகும் நீயே- உலகத்தை அழிக்கின்ற கடையூழிக் காலமும் நீயே உன்னால் அழிக்கப்படும் உலகமும் நீயே; அவற்று உறை உயிரும் நீயே- அவ்வுலகத்துள் வாழும் எல்லா உயிரினங்களும் நீயே; வாழியாய் அடியேன் நின்னை மறப்பனோ- என்றும் வாழ்கின்ற பெருமானே அடியவனாகிய நான் உன்னை மறப்பேனோ?; வயங்கு செந்தீச் சூழுற- விளங்குகின்ற செந்நிறத் தீ என்னைச் சூழ்ந்து கொள்ள; உலைந்து போனேன்- (அதனால் நான்) அழிந்தே போனேன்; காத்து அருள்- அடியேனைக் காத்து அடைக்கலம் தந்தருள்வாயாக. |
சுருதி - வேதம். 'திடவிசும் பெரி வளி நீர் நிலம் இவை மிசை, படர் பொருள் முழுவதுமாய் அவையவை தொறும், உடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்" என்ற திருவாய் மொழி நினைவு கூரத்தக்கது. கடலும் நீ. அக்கடலை அழித்த தீயும் நீ. கடையூழிக் காலமும் நீ. அக்காலத்து அழியும் உலகும் நீ அவ்வுலகத்தில் வாழும் உயிர்களும் நீ என்று வருணன் கூறியது பரமனது எல்லாமாயிருக்கும் தன்மையை உணர்த்தும், பரம் பொருள் என்றும் ஒரே தன்மையாய் நிலைத்து நிற்பது என்பதால் 'வாழியாய்' என்றான். |
(68) |
6657. | 'காட்டுவாய் உலகம்; காட்டிக் காத்து, அவை |
| கடையில் செந் தீ |
| ஊட்டுவாய்; உண்பாய், நீயே; உனக்கும் ஒண்ணாதது |
| உண்டோ? |
| தீட்டு வான் பகழி ஒன்றால் உலகங்கள் எவையும் |
| தீய |
| வீட்டுவாய்; நினையின், நாயேற்கு இத்தனை |
| வேண்டுமோதான்? |
| |
காட்டுவாய் உலகம்- உலகங்களை யெல்லாம் படைப்பாய்; காட்டிக் காத்து- படைத்ததோடு அவற்றைக் காக்கவும் செய்வாய்; அவை கடையில் செந்தீ ஊட்டுவாய்- அவைகளை ஊழிக்காலத்து முடிவில் ஊழிக் காலப்பெருந்தீயூட்டி அழிப்பாய்; உண்பாய் நீயே- உலகனைத்தையும் உண்டு வயிற்றிலே வைத்துக் காப்பவனும் நீயே; உனக்கும் ஒண்ணாததுண்டோ- எல்லாம் வல்ல உனக்குச் |