பக்கம் எண் :

 வருணனை வழி வேண்டு படலம் 379

செய்ய   இயலாத  செயலும்  உண்டோ?; தீட்டுவான்  பகழி
ஒன்றால் 
-   தீட்டிக்    கூர்மையாக்கப்பட்ட   சிறந்ததொரு
அம்பினாலேயே;  உலகங்கள்  எவையும்  தீய வீட்டுவாய்-
எல்லா உலகங்களும் தீய்ந்து போகும்படி அழிப்பாய்; நினையின்
நாயேற்கு
-   நினைத்துப்   பார்த்தால், நாய்  போன்ற   உனது
அடியவனான எனக்கு; இத்தனை வேண்டுமோதான்- இத்தனை
சினம் வேண்டுமோ?.
 

காட்டுதல்  -   படைத்தல்.   பிரமனாகப்   படைப்பவனும்,
திருமாலாகக்  காப்பவனும்  சிவனாக  அழிப்பவனும் ஒருவனே
என்பதை 'காட்டி,   காத்து,   செந்தீ   ஊட்டுவாய்"   என்றது
உணர்த்தும்.   செந்தீ  ஊட்டிப்  பின் உலகங்கள் அழியாதபடி,
உண்டு  பின்  வயிற்றில்  வைத்துக்  காப்பவனும்  இறைவனே
என்பதனை    "செந்தீ    ஊட்டுவாய்    உண்பாய்    நீயே"
என்பதுணர்த்தும். ஒரு  அம்பால்  உலகனைத்தையும்  தீய்த்து
அழிக்கவல்ல  நீ    எனக்காக  இத்தனை   சினம்   கொள்ள
வேண்டுமோ  என்பான்  'நாயேற்கு  இத்தனை   வேண்டுமோ'
என்றான். வான் பகழி - சிறந்த அம்பு. வீட்டுதல்  - அழித்தல்.
மிகவும் எளிய அடியவன் நான் என்பதை 'நாயேன்' என்றான்.
 

(69)
 

6658.

'சண்ட வான் கிரண வாளால் தயங்கு இருட் காடு

சாய்க்கும்

மண்டலத்து உறையும் சோதி வள்ளலே! மறையின்

வாழ்வே!

 

பண்டை நான்முகனே ஆதி சராசரத்து, உள்ளப்

பள்ளப்

புண்டரீகத்து வைகும் புராதனா! போற்றி, போற்றி!
 

சண்ட  வான்   கிரண   வாளால்  -  கொடிய,  சிறந்த
கிரணங்களாகிய வாளால்; தயங்கு இருள் காட்டைச் சாய்க்கும்
- விளங்குகின்ற   இருளாகிய   காட்டை  வெட்டிச்  சாய்க்கின்ற;
மண்டலத்து உறையும்  சோதி வள்ளலே- சூரிய மண்டலத்தின்
மத்தியிலே  தங்கியிருக்கும்  ஒளி வடிவான  வள்ளலே; மறையின்
வாழ்வே
-  வேதங்களின்  வாழ்வாக  விளங்குபவனே;  பண்டை
நான்முகனே  ஆதி
- பழமையான பிரமன் முதலாகிய; சராசரத்து
உள்ளப்   பள்ளப்  புண்டரீகத்து  வைகும்
-   நிற்பதனவும்,
இயங்குவனவுமான உயிர்களின் உள்ளமாகிய தாமரையிலே வசிக்கும்;
புராதனா போற்றி போற்றி- பழமைமிக்கவனே போற்றி போற்றி.