பக்கம் எண் :

380யுத்த காண்டம் 

சண்டம்  -  கொடுமை.  ஈண்டு   வெப்பக்   கொடுமையே
உணர்த்தும்.  கிரணத்தை   வாளாகவும்,  இருளைக்  காடாகவும்
கூறியது உருவகம்.  சூரிய மண்டலத்தின்  மத்தியிலே  இறைவன்
உறைகிறான்   என்பது    புராணக்   கொள்கை.   மண்டலம் -
பரிதிமண்டலம் உயிரினங்களின்  உள்ளத்தாமரையில் உறைபவன்
பரமன்   ஆதலின்  "சராசரத்து  உள்ளப்   பள்ளப்புண்டரீகத்து
வைகும்" என்றான். உள்ளப் பள்ளம் - உள்ளமாகிய பள்ளம் என்றது
உருவகம்.  புராதனன்  -  பழமையானவன்.  உள்ளப்  பள்ளம் -
உள்ளமாகிய பள்ளம் என்பதால் உருவகம்.
 

(70)
 

6659.

' "கள்ளமாய் உலகம் கொள்ளும் கருணையாய்!

மறையில் கூறும்

எள்ளல் ஆகாத மூலத்து யாதுக்கும் முதலாய் உள்ள

வள்ளலே! காத்தி" என்ற மா கரி வருத்தம் தீர,

புள்ளின்மேல் வந்து தோன்றும் புராதனா! போற்றி,

போற்றி!

 

கள்ளமாய் உலகம் கொள்ளும் கருணையாய்- ஒருவரும்
உணராதவாறு    உலகத்தை   எல்லாம்   உதரத்தில்  வைத்துக்
காத்தருளிய கருணை மிக்கவனே; மறையில் கூறும்-வேதங்களில்
விரித்துக்  கூறப்படுகின்ற;  எள்ளல் ஆகாத மூலத்து- எங்கும்
இகழ்ந்து    பேசமுடியாத   மூலப்பகுதியிலிருந்து    தோன்றிய;
யாதுக்கும்  முதலாயுள்ள வள்ளலே-  எல்லா உயிர்களுக்கும்
முதலாக உள்ள வள்ளலே; காத்தி என்ற மாகரி வருத்தம் தீர-
என்னைக்  காத்தருள்வாயாக என்று முறையிட்ட  பெருமை மிக்க
யானையின்  துன்பம் தீர;  புள்ளின் மேல் வந்து தோன்றும்-
பறவையரசனான கருடன் மீதமர்ந்து  வந்து தோன்றிய; புராதனா
போற்றி போற்றி
- பழமையோனே போற்றி போற்றி!
 

கள்ளமாய்   -   ஒருவரும்   உணராதவாறு    மூலத்து -
மூலப்பகுதியிலிருந்து   மாகரி  -   பெருமையுடைய    யானை
(கஜேந்திரன்) புள்  -  பறவை,   ஈண்டுக்கருடன்.  வருத்தம் -
முதலையால்   பட்ட  துன்பம்.  எவரும்    உணரமுடியாதவாறு
உலகத்துயிர்களை எல்லாம்  காத்தருளும் கருணை  உடையவன்
இறைவன் என்பதை 'கள்ளமாய் உலகம் கொள்ளும் கருணையாய்'
என்பதுணர்த்தும்.
 

(71)
 

6660.

'அன்னை நீ; அத்தன் நீயே; அல்லவை எல்லாம் நீயே;
பின்னும் நீ; முன்னும் நீயே; பேறும் நீ; இழவும் நீயே;