பக்கம் எண் :

382யுத்த காண்டம் 

'தீயன சிறியோர் செய்தால், பொறுப்பது பெரியோர்

செய்கை;

ஆயிர நாமத்து ஐயா! சரணம்' என்று அடியில் 

வீழ்ந்தான்.

  

பாய்   இருள்  சீய்க்கும்-  எங்கும்  பரவிய  இருளைப்
போக்குகின்ற;  தெய்வப் பருதியை- தெய்வத்தன்மை வாய்ந்த
சூரியனையும்; பழிக்கும்  மாலை-  பழித்துக் கீழானதென்று
கூறச் செய்யும் ஒளிமிக்க மாலை ஒன்றை; மாயிரும் கரத்தால்
- தனது  பெரிய  கைகளால்;  மண்   மேல்  அடியுறையாக
வைத்து
-  (ராமபிரானுக்கு   முன்பு)  தரைமீது  காணிக்கையாக
வைத்து;    தீயன   சிறியோர்   செய்தால்-   சிறியவர்கள்
அறியாமையினாலே  தீமை   செய்வார்களானால்;  பொறுப்பது
பெரியோர்  செய்கை
-   அத்தீமையைப்   பொறுத்தருள்வது
பெரியவர்களின்  செய்கையாகும்; ஆயிரம்  நாமத்து  ஐயா-
ஆயிரம் திருநாமங்களை உடைய  தலைவனே; சரணம் என்று
அடியில் வீழ்ந்தான்
- அடியேன் உனக்கு அடைக்கலம் என்று
கூறியபடி வருணன் இராமபிரானது திருவடிகளில் விழுந்தான்.
 

பாய்இருள் - பரவிய இருள் சீய்க்கும் - மாற்றும் (சிதைக்கும்).
சிறந்த    ஒளியினால்   சூரியனையும்   கீழ்ப்படுத்தும்  மணியை
'பருதியைப்  பழிக்கும்  மாலை'  என்றார். மாயிரும் கரம் - மிகப்
பெரிய கைகள்  (மீமிசைச் சொல்). அடியுறை -  திருவடிகளுக்குப்
பொருந்துவதாகிய  காணிக்கைப் பொருள். "சீறுவாய் அல்லை ஐய
சிறியவர் தீமை  செய்தால், ஆறுவாய்  நீ  அலால்  மற்று   ஆர்
உளர்'  எனத்  தாரை   இலக்குவனிடம்  கூறியது  (4323)  இங்கு
நினையத்  தக்கது.  பரமனுக்கு  ஆயிரம்  திருநாமங்கள்  உண்டு.
பேராயிரம்  உடையான்'  என்று  பேசுவார்  "சேராதன  உளரோ
பெருஞ்  செல்வர்க்கு  வேதம்   செப்பும், பேர்  ஆயிரம்  திண்
பெரும்புயம் ஆயிரம்  பெய்துளவத், தாரார்  முடி ஆயிரம்  குரு
கூர்ச் சட கோபன்  சொன்ன, ஆரா அமுதக் கவி ஆயிரம் அவ்
வரியினுக்கே' என்ற சடகோபரந்தாதி (45) ஒப்பு நோக்கத் தக்கது.
சரணம் - அடைக்கலம்)
 

(73)
 

இராமபிரான் சினம் தணிந்து காலம் தாழ்த்தமைக்குக் காரணம் வினவுதல்
 

6662.

பருப்பதம் வேவது என்னப் படர் ஒளி படராநின்ற
உருப் பெறக் காட்டி நின்று, 'நான் உனக்கு அபயம்'

என்ன,