| அருப்பு அறப் பிறந்த கோபம் ஆறினான், ஆறா |
| ஆற்றல் |
| நெருப்பு உறப் பொங்கும் வெம் பால் நீர் உற்றது |
| அன்ன நீரான். |
| |
பருப்பதம் வேவது என்ன- ஒரு மலையே நெருப்புப் பற்றி எரிவது போல; படர் ஒளி படரா நின்ற உருப்பெறக் காட்டி நின்று- பரவிய ஒளி படர்ந்து நின்று தனது வடிவத்தை நன்றாகக் காட்டி நின்று; நான் உனக்கு அபயம் என்ன- உனக்கு நான் அடைக்கலம் என்று வருணன் கூற; அருப்பறப் பிறந்த கோபம் ஆறினான்- இராமபிரான் மிகுதியாக உண்டான சினம் தணிந்தான்; ஆறா ஆற்றல் நெருப்பு உற- தணியாத வலிமை கொண்ட நெருப்புப் பொருந்தலால்; பொங்கும் வெம்பால்- பொங்கிய காய்ந்த பாலில்; நீர் உற்றது அன்ன நீரான் - நீர் தெளித்தால் தணிவது போன்ற தன்மையன் ஆயினான். |
பருப்பதம் - மலை. உருப்பெறக் காட்டல் - வடிவத்தை நன்றாகக் காட்டல். அரும்பு + அற என்பது அரும்பற என்றாகி, பின்னர் அருப்பற என்று வலித்தது. அரும்பு இங்கே முதனிலைத் தொழிற்பெயர் (அரும்புதல்). அரும்புதல் அளவுகூட இல்லாமல் கோபம் ஆறியது என்பதாம். மலையே வேவது போன்ற தோற்றத்தோடு வந்த வருணன் 'நான் உனக்கு அபயம்' என அபயக் குரல்தந்தான். அதனைக் கேட்டும், வருணனது வடிவத்தைக் கண்டும் பொங்கும் பாலில் நீர் தெளித்தால் தணிவது போல, இராமபிரான் சினம் அடங்கினான் என்க. நீரான் - தண்மையன். |
(74) |
6663. | 'ஆறினாம்; அஞ்சல்; உன்பால் அளித்தனம் அபயம், |
| அன்பால்; |
| ஈறு இலா வணக்கம் செய்து, யாம் இரந்திட, |
| எய்திடாதே, |
| சீறுமா கண்டு வந்த திறத்தினைத் தெரிவதாகக் |
| கூறுதி, அறிய' என்றான்; வருணனும், தொழுது |
| கூறும்: |
| |
ஆறினாம் அஞ்சல் உன்பால் அளித்தனம் அபயம்- கோபம் தணிந்தேன், அஞ்சாதே உனக்கு அடைக்கலம் அளித்தேன்; அன்பால் ஈறிலா வணக்கம் செய்து- உன்னிடம் அன்பு கொண்டவனாய் உனக்கு முடிவில்லாத வணக்கம் செய்து; யாம் |