பக்கம் எண் :

384யுத்த காண்டம் 

இரந்திட  எய்திடாதே-  நான்  பணிவுடன் கெஞ்சிக்  கேட்க
வராமல்; சீறுமா கண்டு வந்த திறத்தினை- சீற்றமிகக் கொண்டு
நின்றதைக்   கண்டு  அதன்  பிறகு   இங்கு வந்த  தன்மையை;
தெரிவதாகக்   கூறுதி   அறியஎன்றான்-  நான்    தெரிந்து
கொள்ளுமாறு கூறுவாயாக  என்றான்  இராமபிரான்; வருணனும்
தொழுது   கூறும்
-  அதைக்  கேட்ட வருணன் இராமபிரானை
வணங்கிக் கூறுவானானான்;
 

ஆறுதல் - தணிதல். அஞ்சல் - அஞ்சாதே பணிந்து வணங்கி
வேண்டிய  போது   வராமல்,   சினந்து   சீறிய   போது  வந்த
தன்மைக்கு வியந்து  'சீறுமா  கண்டு வந்த  திறத்தினைக்  கூறுதி'
என்று இராமபிரான் கேட்க அதற்கு வருணன் மறுமொழி கூறினான்
என்பது  கருத்து  தெரிவதாக - யாவரும்  உணரும்படி.   அறியக்
கூறுதி - யானறிந்து கொள்ளக் கூறுக.
 

(75)
 

6664.

'பார்த்தனில் பொறையின் மிக்க பத்தினிக்கு உற்ற

பண்பு

வார்த்தையின் அறிந்தது அல்லால், தேவர்பால்

வந்திலேன், நான்;

தீர்த்த! நின் ஆணை; ஏழாம் செறி திரைக் கடலில்

மீனின்

போர்த் தொழில் விலக்கப் போனேன்; அறிந்திலேன்

புகுந்ததுஒன்றும்.'

 

பார்த்தனில்    பொறையின்   மிக்க   பத்தினிக்கு-
நிலமகளைக்  காட்டிலும்  பொறுமைமிக்க பத்தினியான   சீதா
பிராட்டி; உற்ற  பண்பு  வார்த்தையின்  அறிந்ததல்லால்-
நேர்ந்ததனை     இப்போது      உனது      வார்த்தையால்
அறிந்தேனேயல்லாது; தேவர் பால் வந்திலேன் நான்- நான்
தேவர்களிடம் வந்தேனல்லேன் (எனவே பிராட்டியின் நிலையை
முன்பு அறியேன்); தீர்த்த! நின் ஆணை- தூய்மை மிக்கவனே!
உன் மீது  ஆணையாகக்  கூறுகிறேன்; ஏழாம் செறி திரைக்
கடலில்
-  அலைகள் மிகுந்து  செறிந்துள்ள ஏழாவது கடலிலே;
மீனின் போர்த் தொழில் விலக்கப்  போனேன்-  மீன்கள்
தங்களுக்குள்  பகை   கொண்டு   செய்த  போரை  விலக்கச்
சென்றிருந்தேன்; அறிந்திலேன் புகுந்தது ஒன்றும்- ஆதலால்
இடையில் நிகழ்ந்த செயல் ஒன்றினையும் அறியாதவனானேன்.
 

பார் - உலகம், இங்கு  நிலமகளை  உணர்த்தும். பார்தனில்
என்றது எதுகை நோக்கி ஓசை இன்பத்துக்காக பார்த்தனில் என
வலித்தது.