| பொய்கையின் இடங்கர் கவ்வ, 'புராதனா! போற்றி' |
| என்று |
| கை எடுத்து அழைத்த யானை போன்றன-களி |
| நல் யானை. |
| |
மை உறு மலைகளோடும்- மேகங்கள் தங்கியிருக்கும் மலைகளுடனே; வந்து வீழ்ந்த களிநல்யானை- வானரங்கள் எடுத்து வீசுவதால் வந்து கடலில் வீழ்ந்த மதம் கொண்ட யானைகள்; வெய்யவாய் மகரம் பற்ற வெருவின விளிப்ப- கொடிய வாயை உடைய முதலைகள் பற்றுவதால் அஞ்சிக் கதறிய செயல்; மேல் நாள் பொய்கையின் இடங்கர் கவ்வ- முன்னாளிலே பொய்கையிலிருந்த முதலை காலைக் கவ்வ; புராதனா போற்றி என்று- பழமையான தலைவனே காப்பாயாக என்று; கை எடுத்து அழைத்த யானை போன்றன- தும்பிக்கையை மேலே உயர்த்தி இறைவனை அழைத்த யானையான கஜேந்திரனைப் போன்றிருந்தது. |
மை - கருமை; ஈண்டு மேகங்கள். களி நல்யானை - மதக் களிப்புடைய யானை. மகரம் - மகரமீன் (முதலை எனலுமாம்) இடங்கர் - முதலை. கடலுக்குப் பொய்கையும். யானைக்குக் கஜேந்திரனும் மகரமீனுக்கு முதலையும் உவமையாயின. |
(16) |
6690. | அசும்பு பாய் தேனும், பூவும், ஆரமும், அகிலும், |
| மற்றும், |
| விசும்பு எலாம் உலவும் தெய்வ வேரியின் மிடைந்து |
| விம்ம, |
| தசும்பெலாம் வாசம் ஊட்டிச் சார்த்திய தண்ணீர் |
| என்ன, |
| பசும் புலால் நாறும் வேலை பரிமளம் கமழ்ந்தது |
| அன்றே. |
| |
அசும்புபாய் தேனும் பூவும்- கசிந்து பாய்கின்ற தேனும் மணமலர்களும்; ஆரமும் அகிலும் மற்றும்- சந்தனம், அகில் போன்ற மற்றும் பலமணப் பொருள்களும்; விசும் பெலாம் உலவும் தெய்வ வேரியின்- ஆகாயமெல்லாம் பரவும் தெய்விக மணம் போல; மிடைந்து விம்ம- எங்கும் நெருங்கி அதிகரிக்க; பசும் புலால் நாறும் வேலை- பசும் புலால் நாற்றம் வீசும் அக்கடல்; தசும்பெலாம் வாசம் ஊட்டிச் சார்த்திய தண்ணீர் என்ன- மணம் |