ஊட்டப் பெற்று, குடத்திலே நிறைத்து வைத்த தண்ணீர் போல; பரிமளம் கமழ்ந்தது- நல்ல மணம் கமழ்வதாயிற்று. |
அசும்பு - கசிதல். ஆரம் - சந்தனம். தசும்பு - குடம். வேரி - மணம். காற்றோடு கலந்து எங்கும் மணம் வீசுவதால் "விசும்பு எலாம் உலவும் தெய்வ வேரி' என்றார்; தெய்வங்களும் விரும்பும் மணம் என்பது கருத்து. விம்மி - மிகுந்து. சார்த்திய - நிறைத்து வைத்த. "தெருண்ட மேலவர் சிறியவர்ச் சேரினும் அவர்தம் மருண்ட தன்மையை மாற்றுவர்" என்று முன்னும் (820) கூறுவது ஒப்பிடத் தக்கது. |
(17) |
6691. | தேம் முதல் கனியும் காயும், தேனினோடு ஊனும், |
| தெய்வப் |
| பூ முதலாய எல்லாம், மீன் கொளப் பொலிந்த |
| அன்றே, |
| மா முதல் தருவோடு ஓங்கும் வான் உயர் மானக் |
| குன்றம்- |
| தாம் முதலோடும் கெட்டால் ஒழிவரோ, வண்மை |
| தக்கோர்? |
| |
தேம் முதல் கனியும் காயும்- இனிய பழங்களும் தின்பதற்குரிய காய்களும்; தேனினோடு ஊனும்- தேனுடன் தின்பதற்கான ஊனும்; தெய்வப் பூ முதலாய எல்லாம்- தெய்வங்களும் விரும்பும் மண மலர்களும் மற்றும் பலவும்; மீன் கொளப் பொலிந்தது- (மலைகளை வானரங்கள் கடலில் வீசுதலால்) மீன்கள் தின்னும்படி பொலிந்தது; மாமுதல் தருவோடு ஓங்கும்- மாமுதலிய நல்ல பழமரங்கள் நிறைந்துள்ள; வான் உயர் மானக் குன்றம்- வானமளவும் உயர்ந்துள்ள அந்த மலைகள்; வண்மை தக்கோர்-வள்ளல் பண்புள்ள மேலோர்கள்; தாம் முதலோடும் கெட்டால் ஒழிவரோ- தாம், தமது செல்வத்தை இழந்தாலும் வள்ளல் பண்பு நீங்குவரோ?. |
தேம் - இனிமை. தேம்முதல் கனி - இனிமையைத் தம்மிடத்தே கொண்ட பழம். வான் உயர் மானக்குன்றம் - கனியும், காயும் பூமுதலாய எல்லாம் மீன் கொளப் பொலிந்தது' என இயையும். 'வண்மை தக்கோர் தாம் முதலோடு கெட்டால் ஒழிவரோ?' என்ற பொதுப் பொருளை விளக்குவதால் இரு வேற்றுப் பொருள் வைப்பணியாம். |
(18) |