பக்கம் எண் :

 சேது பந்தனப் படலம் 405

6692.

மண்ணுறச் சேற்றுள் புக்குச் சுரிகின்ற மாலைக்

குன்றம்-

கள் நிறை போதும், காயும், கனிகளும், பிறவும்,

கவ்வி

வெண் நிற மீன்கள் எல்லாம், வறியவர் என்ன,-

மேன்மேல்

உள் நிறை செல்வம் நல்காது ஒளிக்கின்ற உலோபர்

ஒத்த.

 

மண்ணுறச் சேற்றுள் புக்கு- மண்ணில் பதித்து சேற்றுக்குள்
நுழைந்து;  சுரிகின்ற  மாலைக்  குன்றம் - உள்ளே அழுந்திய
மலைகளின்   வரிசையானது;   கள்நிறை   போதும்   காயும்
கனிகளும்  பிறவும்
- தேன்  நிறைந்த  மலர்களும்,  காய்களும்
கனிகளும் பிறவற்றையும்; வெண்நிற மீன்கள் எல்லாம் கவ்வி-
வெண்மை  நிறமான  மீன்கள்  எல்லாம் கவ்வி உண்ண எண்ணி;
வறியவர் என்ன- எதுவும் கிடைக்கப்  பெறாத  வறியவர்களைப்
போல ஏமாற; மேல்மேல் உள் நிறை செல்வம்-மேலும் மேலும்
உள்ளே நிறைந்த செல்வத்தை; நல்காது ஒளிக்கின்ற  உலோபர்
ஒத்த
- எவருக்கும் தராமல்  ஒளித்து  வைத்துள்ள உலோபிகளை
ஒத்திருந்தது.
 

சுரிதல் - உள்ளே அழுந்துதல் மாலை - வரிசை கள் - தேன்
போது - மலர். இது உவமையணி.
 

(19)
 

6693.

கறங்கு எனத் திரியும் வேகக் கவிக் குலம் கதுவ

வாங்கி,

பிறங்கு இருங் கடலில் பெய்த போழ்தத்தும், பெரிய

பாந்தள்,

மறம் கிளர் மான யானை வயிற்றின ஆக, வாய்

சோர்ந்து,

உறங்கின-கேடு உற்றாலும், உணர்வரோ உணர்வு

இலாதார்?

 

கறங்கெனத்  திரியும்  வேகக் கவிக்குலம்- காற்றாடியை
ஒத்து  வேகமாகச்  சுற்றித்  திரியும்  வானரக்  கூட்டம்;  கதுவ
வாங்கி   பிறங்கிடும்   கடலில்   பெய்த   போழ்தத்தும்
-
மலைகளைப் பற்றிப் பிடுங்கி அந்தப் பெரிய கடலின் மீது எறிந்த
போதும்; பெரிய