இழை - அணிகலம். மின்னின் - மின்னலைப் போல (ஒளியுடைய). மத்தமா - மதம் பொருந்திய யானை. மகரமீன்களுக்கும் தும்பிக்கை உண்டு. ஆதலால் 'புழையுடைத்தடக்கை பொருந்தச் சுற்றி' என்றார். மேகங்கள் இடி முழக்கத்துடன் மழை பொழியும் மகரமும் மத்தமாவும் முழக்கம் செய்து போரிட்டன என்பது கருத்து. |
(21) |
6695. | பொன்றின, சிறிய ஆய புண்ணியம் புரிந்தோர் |
| போல,- |
| குன்றுகள் குரக்கு வீரர் குவித்தன நெருப்புக் |
| கோப்ப, |
| ஒன்றின் மேல் ஒன்று வீழ, உகைத்து எழுந்து, உம்பர் |
| நாட்டுச் |
| சென்று, மேல் நிலை பெறாது, திரிந்தன-சிகரச் |
| சில்லி. |
| |
குன்றுகள் குரக்கு வீரர் குவித்தன- வானர வீரர்கள் கொண்டு வந்து குவித்த மலைகள்; ஒன்றின் மேல் ஒன்று வீழ- ஒன்றின் மேல் ஒன்று வீழ்வதால்; நெருப்புக் கோப்ப- இடையிலே நெருப்பு உண்டாக; சிகரச் சில்லி - மலைச் சிகரங்களின் சிறுதுண்டுகள்; உகைத்து எழுந்து உம்பர் நாட்டுச் சென்று- வேகத்தோடு எழுந்து விண்ணுலகுக்குச் சென்று; மேல் நிலை பெறாது- மேலே நிலைத்து நிற்க இயலாமல்; பொன்றின சிறிய புண்ணியம் புரிந்தோர் போல- இறந்து போய்விட்ட சிறிதளவு புண்ணியம் செய்தவர்கள் தாம் செய்த புண்ணியத்திற்கேற்ப விண்ணுலகம் சேர்ந்து புண்ணியப்பயன் தீர்ந்து மீண்டும் மண்ணுலகு வருவது போல; திரிந்தன- கீழே வந்து வீழ்ந்தன. |
கோப்ப - உண்டாக (பிறக்க). சிகரச் சில்லி - மலைச் சிகரத்தின் சிறிய துண்டுகள். உகைத்து - விரைந்து உவமையணி. உம்பர் நாடு - தேவருலகம். |
(22) |
6696. | கூருடை எயிற்றுக் கோள் மாச் சுறவுஇனம் எறிந்து |
| கொல்ல, |
| போருடை அரியும், வெய்ய புலிகளும், யாளிப் |
| போத்தும், |
| நீரிடைத் தோற்ற அன்றே?-தம் நிலை நீங்கிச் |
| சென்றால், |
| ஆரிடைத் தோலார் மேலோர், அறிவிடை நோக்கின் |
| அம்மா? |