கூருடை எயிற்றுக் கோள்மாச் சுறவினம்- கூர்மையான பற்களை உடைய எவரையும் கொல்லவல்ல பெரிய சுறாமீன்கள்; எறிந்து கொல்ல- வெட்டிக் கொல்வதால்; போருடை அரியும் -போர் செய்ய வல்ல சிங்கங்களும்; வெய்ய புலிகளும்- கொடுமை மிக்க புலிகளும்; யாளிப் போத்தும்- ஆண் யாளிகளும்; நீரிடைத் தோற்ற (அன்றே)- தண்ணீரிலே தோற்று இறந்தன; அறிவிடை நோக்கின்-அறிவால் ஆராய்ந்து பார்த்தால்; தம் நிலை நீங்கிச் சென்றால்- தாம் நிலைத்து வாழுமிடத்தை நீங்கிச் செல்வாராயின்; மேலோர் ஆரிடைத் தோலார் - வல்லமை மிக்கவர்களும் எவரிடம் தோல்வி அடையமாட்டார்கள்; தோல்வியுறவே செய்வர். |
கூர் உடை எயிறு - கூர்மையானபற்கள். கோள்மா - உயிர்களைக் கொன்று கொள்ள வல்ல விலங்கு. சுறவு இனம் - சுறாமீன்களின் கூட்டம். தோலார் - தோல்வியடையார். அன்றே, அம்மா என்பன அசைச் சொற்கள். |
(23) |
6697. | ஒள்ளிய உணர்வு கூட, உதவலர் எனினும் ஒன்றோ, |
| வள்ளியர் ஆயோர் செல்வம் மன்னுயிர்க்கு உதவும் |
| அன்றே?- |
| துள்ளின, குதித்த, வானத்து உயர் வரைக் |
| குவட்டில் தூங்கும் |
| கள்ளினை நிறைய மாந்தி, கவி எனக் களித்த, |
| மீன்கள். |
| |
வானத்து உயர்வரைக் குவட்டில்- (வானரங்களால் கடலில் வீசப்பட்ட வானளவு உயர்ந்த மலைகளின் உச்சியில்; தூங்கும் கள்ளினை நிறைய மாந்தி- தொங்கிய தேன் கூடுகளிலுள்ள தேனை நிறையக் குடித்து விட்டு; கவி என மீன்கள் களித்த துள்ளின குதித்த- கடலில் வாழும் மீன்கள் எல்லாம் குரங்குகளைப் போலக் களித்துத் துள்ளிக் குதித்தன வாயின என்பது; வள்ளியர் ஆயோர்- வள்ளல் பண்பு உடையவர்கள்; ஒள்ளிய உணர்வு கூட- தெளிவான உணர்வுடனே; உதவலர் எனினும் ஒன்றோ- பிறருக்கு உதவவில்லை என்றாலும்; செல்வம் மன்னுயிர்க்கு உதவும் அன்றே- அவர்களது செல்வம் உலகத்து உயிர்களுக்கு உதவுமல்லவா அது போன்றிருந்தது. |
குவடு - சிகரம். தூங்கும் - தொங்கும். கள் - தேன். வள்ளியர் ஆயோர் - வள்ளல் பண்புடையவர்கள். ஒள்ளிய - விளக்கத்தை உடைய. |