விண்தலம் தொடும் மால்வரை- விண்ணை முட்டும்படி உயர்ந்துள்ள பெரிய மலைகளை; வேரொடும் கொண்டு- அடியோடு பேர்த்து எடுத்துக்கொண்டு; அலம் கொள வீரர் குவித்தலால் - உடல்வருந்தும்படி வானர வீரர் கடலில் குவிப்பதாலே; கடல் திண்தலம் ஆனது- கடல் வலிய நிலமாக மாறியது; நீர்செல மண்தலம் கடலாகி மறைந்ததே- கடல் செல்லுவதால் தரைகடலாக மாறி மறைந்தது. |
அலம் - வருத்தம் துன்பம், தம்முடல் வருந்தும்படி மலைகளைக் கடலில் குவித்தன என்பார் 'அலம் கொள வீரர்குவித்தலால்" என்றார். கடல் தரையாகியது, தரை கடலாக மாறியது என்பது கருத்து. |
(26) |
6700. | அய்யன் வேண்டின், அது இது ஆம் அன்றே- |
| வெய்ய சீயமும், யாளியும், வேங்கையும், |
| மொய் கொள் குன்றின்முதலின, மொய்த்தலால், |
| நெய்தல் வேலி குறிஞ்சி நிகர்த்ததால்! |
| |
வெய்ய சீயமும் யாளியும் - கொடிய சிங்கங்களும் யாளிகளும்; வேங்கையும் - வேங்கைகளும் ஆகியவற்றுடன்; மொய்கொள் குன்றின் முதலின- நெருங்கிய மலைகளில் உள்ள மலைபடு பொருள்கள் முதலியன; மொய்த்தலால்- செறிந்திருத்தலால்; நெய்தல் வேலி குறிஞ்சி நிகர்த்தது- நெய்தல் நிலம் குறிஞ்சியை ஒத்துக் காணப்பட்டது; அய்யன் வேண்டின் அது இது ஆமன்றே - எல்லோருக்கும் தலைவனாகிய இறைவனே விரும்பினால் ஒன்று மற்றொன்று ஆகுமல்லவா? |
வானர வீரர்கள் மலைகளைக் கொண்டு வந்து கடலில் போடுவதால் மலையில் வாழும் சிங்கம், யாளி, வேங்கை முதலியனவும், மற்றுமுள்ள மலைபடு பொருள்களும் கடலில் நிறைந்திருத்தலால், கடல் நிலம் மலை நிலம் போலக் காணப்பட்டது. நெய்தல் கடலும் கடல் சார்ந்த நிலமும் குறிஞ்சி மலையும் மலைசார்ந்த நிலமுமாம். எனவே, 'நெய்தல் வேலி குறிஞ்சி நிகர்த்தது' என்றார். 'மொய் கொள் குன்றின் முதலின' என்றது மலைநிலத்திலுள்ள மற்றைய மலை படு பொருள்களையாம். |
(27) |
6701. | 'யான் உணாதன இங்கு இவை' என்னவே, |
| தீன் உணாதன; என் இது செய்யுமே? |
| மான் உணாத திரைக் கடல் வாழ்தரு |
| மீன் உணாதன இல்லை விலங்குஅரோ. |