பக்கம் எண் :

 சேது பந்தனப் படலம் 411

யான்   உணாதன  இங்கு  இவை-   (வானர   வீரர்கள்
மலைகளைக்   கடலில்  எறிவதால்  அம்  மலையின்  வாழ்ந்த
மான்கள் உணவு தேடி அலைந்து எங்கும் மீன்களே இருப்பதால்)
யான்  உண்ணத்தகாதன   இவை;  என்னவே தீன் உணாதன-
என்று   விலக்கி  எதையும்  தின்னாதன  வாயின;  என்  இது
செய்யும்
-  (மலையிலிருந்து  வந்த  விலங்குகள்) வேறு  என்ன
செய்யும்; மான்  உணாத  திரைக்  கடல்-  கடலில்  வீழ்ந்த
விலங்குகள்  உண்ணத்தகாதன  வான; மீன்  உணாத விலங்கு
இல்லை
- மீன்கள் தின்னாத விலங்குகளே எதுவுமில்லை.
 

தீன்  - தீனி.   'என்   இது   செய்யுமே'  கடலில்  உள்ள
மீன்களைத்  தின்னாத மலை  விலங்குகள் எதைத் தின்று எப்படி
உயிர் வாழப்  போகின்றன என்ற  இரக்கம் தோன்ற  உரைத்தார்.
'மான்'  இங்கே  பொதுவாக  விலங்குகளைக் குறித்தது.  கடலில்
உள்ள   மீன்களைத்   தின்ன   இயலாதிருக்க   அம்மீன்களோ
மலையிலிருந்து வீழ்ந்த  எல்லா விலங்குகளையும் தின்றன என்க.
'யான் உணாதன இங்கு   இவை' எனக் கூறி மீன்களை விலக்கிய
விலங்குகள். எதையுமே தின்னாதனவாக இருந்தன; அவை  வேறு
என்னதான் செய்யப் போகின்றன என்பது கருத்து.
 

(28)
 

6702.

வவ் விலங்கு வளர்த்தவர்மாட்டு அருள்
செவ் விலங்கல் இல் சிந்தையின் தீர்வரோ-
'இவ் விலங்கல் விடேம்' இனி என்பபோல்,
எவ் விலங்கும் வந்து எய்தின வேலையே!
 

வவ்விலங்கு    வளர்த்தவர்    மாட்டு   -   தம்மை
வளர்த்தவர்களைப்   பிறர்   பற்றிக்   கொண்டால்  அப்போது
வளர்த்தவரிடம்;   செவ்விலங்கல்    இல்    சிந்தையில்-
செம்மையான  நெறியிலிருந்து விலகாத  மனத்திலிருந்து; அருள்
தீர்வரோ
- (வளர்த்தவர்பால்)  அருள்  நீங்கப் பெறுவார்களோ
(மாட்டார்); இனி  இவ்விலங்கல்  விடேம் -  இனியும் இந்த
மலையை  விட்டுப்  போக மாட்டோம்; என்ப போல்-  என்று
தீர்மானித்தன போல;  எவ்  விலங்கும்-  மலையில்  வாழ்ந்த
எல்லா    விலங்குகளும்;    வந்து  எய்தின    வேலையே-
வானரங்கள்    மலைகளைக்     கடலில்    எறிந்த    போது
அம்மலையோடு கடலை எய்தின.
 

செவ் விலங்கல்  இல் - செம்மை  நெறியிலிருந்து தீர்வரோ
- தீர்வார்களோ     ஓகாரம்    எதிர்    மறைப்    பொருளில்
வளர்த்தவர்களைப்   பிறர்   பற்றிக்   கொண்டால்,   வளர்த்த
பாசத்தால் அவர்களை விட்டு நீங்காமல் தம்மை வளர்த்தவரோடு
வந்து விடும் நல்ல மனம் உள்ளவர்