பக்கம் எண் :

412யுத்த காண்டம் 

களைப்   போல  மலை   விலங்குகள்  மலைகளோடு  கடலை
அடைந்தன என்பது கருத்து.
 

(29)
 

6703.

கனி தரும், நெடுங் காய் தரும், நாள்தொறும்-
இனிது அருந் தவம் நொய்தின் இயற்றலால்,-
பனி தருங் கிரி தம் மனம் பற்று அறு
முனிவரும் முனியார், முடிவு உன்னுவார்.
 

நாள் தொறும்- ஒவ்வொரு நாளிலும்; நெடும் கனி தரும்-
உண்பதற்கு இனிய கனிகளைக் கொடுக்கும்; நெடும் காய்தரும்-
பெரிதாய் முற்றிய காய்களைக் கொடுக்கும்; இனிது அருந்தவம்
நொய்தின்  இயற்றலால்
-  அரியதவத்தை  இனிதே எளிதில்
செய்வதற்கு   இடமாக;  பனிதரும் கிரி  -    குளிர்ச்சியைத்
தருகின்ற மலையினை; தம்மனம்  பற்றறு  முனிவரும்- தமது
மனத்தில்  பற்றற்ற  முனிவர்களும்கூட;  முடிவு  உன்னுவார்-
(பின்    விளைவை    எண்ணி)    அரக்கர்களின்   முடிவை
நினைப்பவராய்;    முனியார் -   மலைகளைப்   பெயர்த்த
வானரங்களை வெகுளாராயினர்.
 

முடிவு உன்னுவார் - மலைகளோடு கடலில் வீழ்ந்து தாம்
அழிவதை நினைத்தும்  முனிவர்  முனியாராயினர் எனினுமாம்.
காலமல்லாக்  காலத்தும்  முனிவர்கள்   பசிதீரக்   கனிதரும்
நெடுங்காய்தரும் என்பது கருத்து.
 

(30)
 

6704.

புலையின் வாழ்க்கை அரக்கர், பொருப்பு உளார்,
தலையின்மேல் வைத்த கையினர், சாற்றுவார்,
'மலை இலேம்; மற்று, மாறு இனி வாழ்வது ஓர்
நிலை இலேம்' என்று, இலங்கை நெருங்கினார்.
 

பொருப்புளார்- மலைகளிலே வாழ்பவர்களாகிய; புலையின்
வாழ்க்கை  அரக்கர்
- பாவத் தொழில்களையே புரிந்து வாழும்
கொடிய  அரக்கர்கள்;  தலையின்  மேல் வைத்த கையினர்-
(வானரங்கள்  மலைகளைப்   பெயர்த்துக்   கடலில்  வீசியதால்)
தலையின்  மீது  வைத்த  கையினராக; மலை இலேம்- நாங்கள்
வாழ்ந்த    மலைகளை    இழந்தவரானோம்;   மற்று   இனி
வாழ்வதோர் நிலைஇலேம்
- மற்று  இனி நாங்கள் வாழ்வதற்கு
நிலையான ஒரு இடம்  இல்லாதவரானோம்; என்று சாற்றுவார்-
என்று கூறியவராக; இலங்கை  நெருங்கினார் - இலங்கையை
அடைந்தார்கள்.