துயரத்தால் வருந்துவோர் தலைமேல் கை வைத்தல் வழக்கம். மலையை இழந்தோம். நிலையான வாழ்வையும் இழந்தோம் என்று அவ்வரக்கர் கூறி வருந்தினர் என்பதால் 'மலை இலேம் மற்றினி வாழ்வதோர் நிலை இலேம்" என்றனர். |
(31) |
6705. | முழுக்க நீரில் புகா, முழுகிச் செலா, |
| குழுக்களோடு அணை கோள் அரி, யாளிகள், |
| இழுக்கு இல் பேர் அணையின் இரு பக்கமும் |
| ஒழுக்கின் மாலை வகுத்தன ஒத்தவே. |
| |
முழுக்க நீரில் புகா - முழுவதும் கடல் நீருக்குள் மூழ்காதவையும்; முழுகிச் செலா- நீரில் மூழ்கியும் செல்லாதனவாய் நின்றவையுமான; குழுக்களோடு அணை- கூட்டம் கூட்டமாய் நெருங்கியிருக்கும்; கோளரி யாளிகள்- உயிர்களைக் கொல்லவல்ல சிங்கங்களும் யாளிகளும்; இழுக்கு இல் பேரணையின்- குற்றமற்ற அந்தப் பெரிய அணையின்; இருபக்கமும்- இரண்டு பக்கங்களிலும்; ஒழுக்கின் மாலை வகுத்தன ஒத்த- ஒழுங்கு பெற வரிசையாக நிற்க வைத்தவை போன்றன. |
அணைதல் - நெருங்குதல். கோள்- கொள்ளவல்ல. ஒழுக்கின் - ஒழுங்காக. மாலை - வரிசை. |
(32) |
6706. | பளிக்கு மால் வரை முந்து படுத்தன |
| ஒளிக்கும் ஆழி கிடந்தன ஓர்கிலார், |
| 'வெளிக்கு மால் வரை வேண்டும்' எனக் |
| கொணர்ந்து, |
| அளிக்கும் வானர வீரர் அநேகரால். |
| |
பளிக்குமால் வரை- பெரிய பளிங்கினாலமைந்த மலைகள்; முந்து படுத்தன- முன்பு வானரங்களால் கடலில் வீசப்பட்டவை; ஒளிக்கும் ஆழி கிடந்தன ஓர்கிலார்- கடலுக்குள் கிடப்பதை அறியாதவராய்; வெளிக்கு மால் வரை வேண்டும்- இந்த இடைவெளிக்கு ஒரு பெரிய மலை தேவை; எனக் கொணர்ந்து அளிக்கும்- என்று கூறிப்பெரிய மலைகளைக் கொண்டு வந்து தருகின்ற; வானர வீரர் அநேகரால்- வானரவீரர் அநேகம் பேராவார். |
பளிங்கு மலை நீரைத் தடுத்திருந்ததை அறியாத வானரங்களை 'ஓர் கிலார்' என்றார். ஒளிக்கும் ஆழி - ஒளிக்கப்பட வேண்டிய கடல் ஓர்தல் - உணர்தல் வெளி - இடைவெளி. |
(33) |