இராமன் வருணனுக்குத் தந்தது போலக் காணப்பட்டது அடுக்கிய மலைகளின் காட்சி. செம்மணி முதலான பல நிற கொண்ட மலையடுக்கு இவ்வாறு வருணிக்கப்பட்டது. |
(35) |
6709. | ஏய்ந்த தம் உடம்பு இட்ட உயிர்க்கு இடம் |
| ஆய்ந்து கொள்ளும் அறிஞரின், ஆழ் கடல் |
| பாய்ந்து பண்டு உறையும் மலைப் பாந்தள்கள், |
| போந்த மா மலையின் முழை, புக்கவே. |
| |
ஏய்ந்த தம் உடம்பு இட்ட உயிர்க்கு- தமது உயிருக்குப் பொருந்திய உடம்பை விட்டு விட்ட அவ்வுயிருக்கு; இடம் ஆய்ந்து கொள்ளும் அறிஞரின்- பொருந்திய இடமான உடலை ஆய்ந்து மறுபடியும் சென்றடையும் யோகிகளைப் போல; மலைப் பாந்தள்- மலைப் பாம்புகள்; ஆழ்கடல் பாய்ந்து- மலைகளை வானரங்கள் கடலில் வீசியபோது அந்தக் கடலிலே பாய்ந்து; பண்டு உறையும் மலை போந்த- முன்பு தாம் வாழ்ந்த மலையை அடைந்து; மாமலையின் முழை புக்க- அந்த மலைக்குகைகளில் நுழைந்தன. |
கூடுவிட்டுக் கூடுபாயும் சித்து வல்ல யோகிகள் தம் உடலை விட்டு நீங்கி வேறு உடலில் வாழ்ந்து, பின் தமது உடலைத் தேடியடைந்து சென்றடைவதை ஒத்து மலைப்பாம்புகளின் செயல் இருந்தது என்பதால் இது உவமையணி. அறிஞர் - யோகிகள். பாந்தள் - பாம்பு. |
(36) |
6710. | சேதுவின் பெருமைக்கு இணை செப்ப, ஓர் |
| ஏது வேண்டும் என்று எண்ணுவது என்கொலோ- |
| தூதன் இட்ட மலையின் துவலையால், |
| மீது விட்டு-உலகு உற்றது, மீன் குலம்? |
| |
சேதுவின் பெருமைக்கு இணை செப்ப- சேதுவின் பெருமைக்கு இணையாகச் சொல்ல; ஓர் ஏது வேண்டும் என்று- ஒரு காரணம் வேண்டும் என்று; எண்ணுவர் என் கொலோ- நினைப்பது எதற்காக?; தூதன் இட்ட மலையின் துவலையால்- இராம தூதனாகிய அனுமன் கடலில் எறிந்த மலையால் எழுந்த நீர்த்திவலைகளோடு; மீன் குலம்- அக்கடலில் வாழுகின்ற மீன் கூட்டங்களும்; மீது விட்டு உலகுற்றது- மேலானதாகிய வீட்டுலகை அடைந்தது. |
சேது - அணை. மீதுவிட்டு உலகு - மேலதாகிய வீட்டுலகம் மீன்கள் நீர்த்துளிகளோடு விண்ணுலகடைந்தன என்பதன் நயம் கருதத் |