பக்கம் எண் :

418யுத்த காண்டம் 

வாலி. அவன்  மகன்  அங்கதன்   எதனாலும்   விலக்கொணாத
மலையைக் கொண்டு, கடல் துன்புறும் படி அக்கடலைக் கலங்கச்
செய்தான் என்பது கருத்து. அலக்கண் - துன்பம்  ஆழி - கடல்.
இலக்குவனது   அம்பின்    வலிமையை'    முன்னும்  பின்னும்
(கம்ப. 2416. 7287) இராமனும் இராவணனும் கூறுவதனாலறியலாம்.
 

(41)
 

6715.

மருத்தின் மைந்தன் மணி நெடுந் தோள் எனப்
பெருத்த குன்றம், கரடிப் பெரும் படை
விருத்தன் இட்ட விசையினின், வீசிய
திருத்தம், வானவர் சென்னியில் சென்றதால்.
 

கரடிப்  பெரும்படை  விருத்தன்-  கரடிகளின்  பெரிய
படைக்குத்   தலைவனான  சாம்பவந்தன்  என்னும்  முதியோன்;
மருத்தின் மைந்தன் - காற்றுத் தேவனாகிய வாயுவின் மகனான
அனுமனது; மணி  நெடுந்தோள்   எனப்   பெருத்தகுன்றம்-
அழகிய பெரிய  தோள்களைப்  போன்ற  ஒரு  பெரிய மலையை;
இட்ட விசையினின் -  கடலில்  எறிந்த வேகத்தினால்;  வீசிய
திருத்தம்
- மேலே  தெரித்த  தீர்த்தம்; வானவர்  சென்னியில்
சென்றது
- தேவர்களது தலையில் சென்று தெறித்தது.
 

விருத்தன் -  வயதானவன்.   சாம்பவந்தன்    நெடுங்காலம்
வாழ்ந்த,  நீண்ட ஆயுளை  உடையவன்.   கரடிப்    படைக்குத்
தலைவன் என்பதால் 'கரடியின் பெரும் படை விருத்தன்' என்றார்.
அனுமனது தோள்களை வியந்து 'மருத்தின் மைந்தன் மணி நெடுந்
தோளெனப் பெருத்த குன்றம்' என்றார். மருத்து - காற்றுத்தேவன்.
விசை - வேகம்.  சிரத்தில்  சென்று  தெறித்தமைக்கு  ஏற்ப  நீர்
என்று கூறாது  "திருத்தம்"  என்றார்.  தீர்த்தம்  என்பதன் திரிபே
திருத்தம். தீர்த்தம் - புனித நீர் எதுகை நோக்கி  'திருத்தம்' எனத்
திரிந்தது.
 

(42)
 

6716.

குமுதன் இட்ட குல வரை கூத்தரின்
திமிதம் இட்டுத் திரியும் திரைக் கடல்
துமி தம் ஊர் புக, வானவர் துள்ளினார்-
அமுதம் இன்னம் எழும் எனும் ஆசையால்.
 

குமுதன்  இட்ட  குலவரை- குமுதன்  என்னும்  வானரத்
தலைவன்   கடலில்  எறிந்த   சிறந்த  தொருமலை;  கூத்தரின்
திமிதம் இட்டு
- கூத்தாடுபவர்களைப்  போலக்  குதித்து  ஆடி;
திரியும் திரைக் கடல்-  சுழன்று  திரியும்  அலைகளையுடைய
கடலில்; துமிதம் ஊர்புக-  நீர்த்துளிகள் தங்கள் ஊரிலே வந்து
விழுவதால்; அமுதம்