6718. | எண் இல் எண்குஇனம் இட்ட கிரிக் குலம், |
| உண்ண உண்ணச் சென்று, ஒன்றினொடு ஒன்று |
| உற, |
| சுண்ண நுண் பொடி ஆகித் தொலைந்தன, |
| புண்ணியம் பொருந்தாத முயற்சிபோல். |
| |
எண்இல் எண்கு இனம்- எண்ண முடியாத கரடிகளின் கூட்டம்; இட்ட கிரிக் குலம்- கடலில் இட்ட மலைகளின் கூட்டம்; உண்ண உண்ணச் சென்று- கடலில் அழுந்த அழுந்தச் சென்று; ஒன்றினொடு ஒன்று உற- ஒன்றுடன் ஒன்று பொருந்துவதால்; புண்ணியம் பொருந்தாத முயற்சிபோல்- புண்ணியப்பயன் பொருந்தாத முயற்சிக்குப் பயனில்லாதது போல; சுண்ண நுண் பொடியாகித் தொலைந்தன- நுண்ணிய தூளாகி அழிந்தன. |
எண்கு - கரடி. கிரிக்குலம் - மலைகளின் கூட்டம். என்றார். |
(45) |
6719. | ஆர ஆயிர யோசனை ஆழமும் |
| தீர நீண்டு பரந்த திமிங்கிலம், |
| பார மால் வரை ஏறப் பதைத்து, உடல் |
| பேரவே, குன்றும் வேலையும் பேர்ந்தவால். |
| |
ஆர ஆயிரம் யோசனை ஆழமும்- கடலில் ஆயிரம் யோசனை ஆழமும்; தீரநீண்டு பரந்த திமிங்கிலம்- முழுதும் நீண்டு பரந்துள்ள திமிங்கிலங்கள்; பார மால் வரை ஏற- பாரமான பெரிய மலை தன் மீது வீழ்தலால்; பதைத்து உடல் பேரவே- பதை பதைத்து உடலைப் பெயர்த்தலால்; குன்றும் வேலையும் - திமிங்கிலங்களின்மீது விழுந்த மலைகளும், கடல்நீரும்; பேர்ந்தவால்- இடம் விட்டுப் பெயர்ந்தனவாயின. |
கடலில் ஆயிரம் யோசனை தூரம் நீண்டு பரந்துள்ள திமிங்கிலங்களின் மீது பாரமான மலைகள் வீழ்வதால் பதை பதைத்து உடலைப் பெயர்த்தன. அதனால் மலைகளும், கடல் நீரும் இடம் பெயர்ந்தன என்பது கருத்து. யோசனை - நூறு மைல் என்பர். (பத்துக்காதம் ஒரு யோசனை) பாரமால் வரை - பாரமான பெரிய மலை (பாரம் + மால் + வரை) (அசைய) |
(46) |
நளன் சேதுவை அமைத்த வகை |
6720. | குலை கொளக் குறி நோக்கிய கொள்கையான், |
| சிலைகள் ஒக்க முறித்துச் செறித்து, நேர் |