பக்கம் எண் :

 சேது பந்தனப் படலம் 421

மலைகள் ஒக்க அடுக்கி, மணற் படத்
தலைகள் ஒக்கத் தடவும், தடக் கையால்.
 

குலைகொளக் குறி நோக்கிய-  அணை நன்றாக அமையும்
படி   சிந்தித்துப்   பார்த்த;     கொள்கையான்-   தன்மையை
உடையவனாகிய  நளன்; சிலைகள் ஒக்க முறித்துச் செறித்து-
கற்களைச் சமமாக  உடைத்து   நன்கு  பொருந்தும்படி சேர்த்து;
நேர் மலைகள் ஒக்க அடுக்கி- மலைகளை  நேராக, சமமாக
இருக்கும்படி அடுக்கி; மணல்பட- இடையிலே மணலைப் பரப்பி;
தடக்கையால்  - தன்  அகன்ற   கைகளால்; தலைகள் ஒக்கத்
தடவும்
- சிகரங்கள் சமமாயிருக்கும்படி தடவுவான்.
 

குலை  -  அணை.   குறிநோக்கிய -   குறித்து  நோக்கிய.
சிந்தித்து   நளன்   கற்களை   வேண்டிய அளவில்  சிதைத்து,
நெருக்கமாக.
 

(47)
 

6721.

தழுவி, ஆயிர கோடியர் தாங்கிய
குழுவின் வானரம் தந்த கிரிக் குலம்,
எழுவின் நீள் கரத்து ஏற்றிட, இற்று இடை
வழுவி வீழ்வன கால்களின் வாங்குவான்.
 

ஆயிரம்  கோடியர் குழுவின் வானரம்- ஆயிரம் கோடி
பேராகிய   வானரக்   கூட்டத்தினர்; தழுவித் தாங்கிய- தமது
கைகளால் தழுவித் தாங்கிக் கொண்டு வந்து; தந்த கிரிக்குலம்-
தந்த மலைக் கூட்டங்களை; எழுவின்  நீள் காத்து ஏற்றிய-
நளன் தனது தூண் போன்ற கைகளில்  ஏற்றுக் கொண்ட போது;
இற்று  இடை  வழுவி  வீழ்வன- முறிந்து  இடையிலே தவறி
வீழ்வனவற்றை; கால்களின் வாங்குவான்- கால்களால் தடுத்து
நிறுத்தி எடுத்துக் கொள்வான்.
 

எழு  -  தூண்.  வீழ்வன  -  கீழே  விழுகின்ற மலைகளை
வானரங்கள்    தூக்க    முடியாமல்     தூக்கின   என்பதால்
'தழுவித்தாங்கிய'   என்றார். நளனது நீண்ட  கைகளை 'எழுவின்
நீள் கரம்' என்று சிறப்பித்தார். நழுவிக் கீழே விழும் மலைகளை
லாவகமாகக்   கால்களால்   தடுத்து நிறுத்தி  எடுத்த  திறத்தை
'கால்களில் வாங்குவான்' என்றார்.
 

(48)
 

மலை சுமந்து வரும் வானரங்கள்
 

6722.

மலை சுமந்து வருவன வானரம்,
நிலையில் நின்றன, செல்ல நிலம் பெறா -