கிரி தூக்கின தோய்தலால் - வானர வீரர்கள் தூக்கிக் கொண்டு வந்த மலைகள் கடலில் தோய்வதால்; துறைதொறும்- அந்தக் கடலின் எல்லாப் பகுதிகளிலும் (நீளத்துறைகளிலும்); குறைவில் குங்குமமும்- தன்மையில் குறைவில்லாத குங்குமமும்; குகைத் தேன்களும்- மலைக் குகைகளிலிருந்து விழுந்த தேனும்; நிறை மலர்க் குலமும் - நிறைந்த பலவித மணமலர்களின் கூட்டமும்; எங்கணும் நிறைந்து- எங்கும் நிறைந்து கிடப்பதால்; நாம நீர் - அச்சத்தைச் செய்யும் உவர்க் கடல்; நறை நெடுங்கடல் ஒத்தது - தேன் நிறைந்த நெடிய கடலை ஒத்திருந்தது. |
நாமநீர் - அச்சத்தைத் தரும் உவர்க்கடல். கிரிதூக்கின குங்குமமும் தேன்களும் மலர்க்குலமும் - தோய்தலால் நாமநீர். நறை நெடுங்கடல் ஒத்தது எனஇயையும். கிரிதூக்கின என்பதற்கு மலைகள் சுமந்துள்ள குங்குமம் முதலியவை எனவும் வானரங்கள் தூக்கிய மலை எனவும் பொருள் கூறலாம். |
(53) |
6727. | நெடும் பல் மால் வரை தூர்த்து நெருக்கவும், |
| துடும்பல் வேலை துளங்கியது இல்லையால்- |
| இடும்பை எத்தனையும் படுத்து எய்தினும், |
| குடும்பம் தாங்கும் குடிப் பிறந்தாரினே. |
| |
இடும்பை எத்தனையும் படுத்து எய்தினும்- துன்பங்கள் எத்தனையும் வந்து தடுத்து எய்தினாலும்; (அதனால்) மனம் தளர்ந்து போகாமல்; குடும்பம் தாங்கும்- தமது குடும்பத்தை ஆதரித்துக் காப்பாற்றும்; குடிப் பிறந்தாரின் - உயர் குடியில் பிறந்தவர்களைப் போல; நெடும் பல்மால் வரை- நீண்ட பெரிய பல மலைகள்; தூர்த்து நெருக்கவும்- தூர்த்து நெருக்கிய போதும்; துடும்பல் வேலை- அலைகள் பேரொலி எழுப்பும் பெரிய கடல்; துளங்கியது இல்லையால்- சிறிதும் கலங்க வில்லை. |
இடும்பை - துன்பம். படுத்து - தடுத்து. தாங்கும் - ஆதரித்துக் காக்கும். இது உவமையணி. குடிப்பிறந்தார் - உவமானம் துடும்பல் வேலை - உவமேயம். இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் உடம்பு (குறள் 1029) எவ்வழி உழந்தக் கடைத்தும் குடிப்பிறந்தார் செய்வர் செயற்பாலவை (நாலடி. 147) என்ற கருத்துகள் இங்கு இணைத்து உணரத் தக்கன. |
(54) |
6728. | கொழுந்துடைப் பவளக் கொடியின் குலம் |
| அழுந்த உய்த்த அடுக்கல் தகர்ந்து, அயல் |