தரவலோம் மலர் என்று - (வண்டுகளுக்கு) வேண்டிய மலர்களை உங்களுக்கு தரவல்லோம் என்று கூறி; உயிர் தாங்கிய மரம் எல்லாம்- அவற்றின் உயிர்களைக் காத்து ஆதரித்துக் கொண்டிருந்த மரங்களெல்லாம்; கடல் வீழ்தலும் - வானரங்களால் பறிக்கப்பட்டுக் கடலில் வீழ்ந்ததும்; வண்டு எலாம் - (அம்மரங்களின் மலர்களில் நிறைந்திருந்த தேனை உண்டு வாழ்ந்திருந்த) வண்டுகள் எல்லாம்; கரவிலாளர் விழ - செல்வத்தை ஒளித்து வைக்காது தம்மை நாடி வந்தவர்க்கு உதவிய கொடையாளிகள் இறந்துவிழ; களைகண் இலா- பற்றுக் கோடு எதுவுமற்ற; இரவலாளரின்- இரவலர்களைப் போல; எங்கும் இரிந்த- எங்கும் ஓடலாயின; |
'வலோம்' வல்லோம் என்பதன் இடைக்குறை - கரவிலாளர் செல்வத்தை ஒளிக்காது பிறர்க்கு உதவுபவர். வண்டுகள் பருக வேண்டிய தேனை வேண்டுமளவு தந்த மரங்களை 'உயிர்தாங்கிய மரம்' என்றார். வரையாது வழங்கும் வள்ளலைப் போல அம்மரங்கள் 'தரவலோம் மலர்' என்று கூறித் தந்தன. கரத்தல் - மறைத்தல். செல்வத்தை மறைத்துவைக்காது நாடி வந்தவர்களுக்கு உதவுபவர் 'கரவிலாளர்' ஆவர் இத்தகையோர் 'கரப்பிலர்' எனவும், கரத்தல் கனவிலும் தேற்றாதார்' எனவும் வள்ளுவரால் போற்றியுரைக்கப்படுவர். களைகண் - பற்றுக் கோடு. |
(57) |
6731. | தொக்கு அடங்கல ஓடும் துவலைகள் |
| மிக்கு அடங்கலும் போவன-மீன் குலம், |
| அக் கருங் கடல் தூர, அயற் கடல் |
| புக்கு அடங்கிடப் போவன போன்றவே. |
| |
தொக்கு அடங்கல ஓடும் துவலைகள்- பலவாகச் சேர்ந்து அடங்காதனவாக ஓடும்நீர்த்துவலைகளோடு; மிக்கு அடங்கலும் போவனமீன்குலம் - முழுவதும் போவனவாகிய மீன் கூட்டங்கள்; அக்கருங்கடல் தூர - அவை வாழ்ந்துவந்த அந்தக் கடல் தூர்ந்து போக; அயற்கடல்புக்கு- தாம் வாழ்வதற்குரிய வேறு ஒரு கடலில் புகுந்து; அடங்கிடப் போவன போன்ற- அடங்குவதற்காகப் போவன போலக் காணப்பட்டன. |
தொக்கு - பலவாகச் சேர்ந்து. திவலைகள் பலவாகச் சேர்ந்து அடங்காதனவாக விரைந்து ஓடுவதை 'தொக்கு அடங்கல ஓடும் துவலைகள்' என்றார். மிகுதியாக உள்ள மீன் அத்தனையும் |