பக்கம் எண் :

428யுத்த காண்டம் 

விலைமகளிரை   முன்பாடலாலும்  குலமகளிரை  இப் பாடலிலும்
நிரலாக   நிறுத்தி  உவமை   நயந்தோன்றக்  கம்பர்  உலகியல்
விளக்கம் தந்தார்.
 

(60)
 

6734.

துப்பு உறக் கடல் தூய துவலையால்,
அப் புறக் கடலும் சுவை அற்றன;
எப் புறத்து உரும்ஏறும் குளிர்ந்தன;
உப்பு உறைத்தன, மேகம் உகுத்த நீர்.
 

துப்பு உறக் கடல் தூய துவலையால்- வானரங்கள் பெரிய
மலைகளைக்   கடலில்   வீசுவதால்,   அந்த   வலிமை   மிக்க
கடல்தூவிய   நீர்த்துவலைகளால்;  அப்புறக்   கடலும்  சுவை
அற்றன
  -  அண்டத்துக்கு   அப்பாலுள்ள  கடல்களும்  சுவை 
இழந்தன; எப்புறத்து  உரும் ஏறும்- எப்புறத்திலுள்ள வெப்பம்
மிகுந்த  பேரிடிகளும்; குளிர்ந்தன - வெம்மை நீங்கிக் குளிர்ந்து
போயின;   மேகம்   உகுத்த   நீர்  -  மேகங்கள் சொரிந்த
மழைநீரும்  கூட;   உப்பு  உறைத்தன  -  உவர்ப்புடையதாய்
உறைத்தன.
 

துப்பு - வலிமை. அப்புறக் கடல்- பெரும் புறக்கடல். உரும்
ஏறு  -  பேரிடி. உகுத்த  - சொரிந்த  பெரும்புறக்கடல் நன்னீர்
உடையது.    அதன்    நீரும்    சுவையற்றதாகியது   என்பார்
'அப்புறக்கடலும்    சுவை    அற்றன"    என்றார்.   எல்லாப்
பக்கங்களிலும்   உள்ள   இடியேறு    நீர்த்    திவலைகளால்
குளிர்ந்தன'   என்றார்.    மேகங்கள்    பொழியும்    மழைநீர்
நன்னீர்   அதுவும்   கடலின்  உப்பு  நீர்த்திவலையால் "உப்பு
உறைத்தன"   என்றார்.  அப்புறக்   கடல்  -  உரும்.  மேகம்
உகுத்தநீர்   இவைகளின்   இயல்பை    மாற்றும்   அளவுக்கு
கடல்நீர்த்திவலைகள்   மிக்கிருத்தலைக்   கூறுவாராய் கடலை,
'துப்புறக் கடல்'
 

(61)
 

6735.

முதிர் நெடுங் கிரி வீழ, முழங்கு நீர்
எதிர் எழுந்து நிரந்தரம் எய்தலால்,
மதியவன் கதிரின் குளிர் வாய்ந்தன-
கதிரவன் கனல் வெங் கதிர்க் கற்றையே.
 

முதிர்  நெடுங்கிரி  வீழ - முதிர்ந்த  பெரிய  மலைகளை
(வானரங்கள்  எறிய,  கடலில்)  அவை  வீழ்வதால்; முழங்குநீர்
எதிர்  எழுந்து
- முழக்கத்தை  உடைய  கடல்  நீர் எதிர்த்து
மேலே எழுந்து;  நிரந்தரம்  எய்தலால் - நிரந்தரமாக மேலே
செல்வதால்;   கதிரவன்   கனல்   வெங்கதிர்க்  கற்றை-
சூரியனுடைய  கனல்   வீசும்   வெப்பமான   ஒளிக்    கதிர்த்
தொகுதியாவும்; மதியவன் கதிரின் -