பக்கம் எண் :

 ஒற்றுக் கேள்விப் படலம் 465

மந்திராலோசனைக்குச்    செல்லுமுன்,   "சக்கரத்தவன்   எனத்
தமியன் ஆயினான்" (1315) எனக் கூறப் பட்டிருத்தல் காண்க.
 

(39)
 

6785.

வார் குலாம் முலை மாதரும், மைந்தரும்,

ஆரும் நீங்க, அறிஞரொடு ஏகினான்-

'சேர்க' என்னின் அல்லால், இளந் தென்றலும்

சார்கிலா நெடு மந்திர சாலையே.
 

'சேர்க'    என்னின்   அல்லால்  -   'வருக'    என்று
ஆணையிட்டால்    அல்லாது;   இளந்தென்றலும் சார்கிலா-
மெல்லியதென்றற் காற்றும் உட்புக இயலாத; நெடு மந்திரசாலை
- நீண்ட  ஆலோசனை  மண்டபத்திற்குள்; வார் குலாம் முலை
மாதரும்
-  கச்சு   ஒளிர்கின்ற   மார்பினையுடைய பெண்களும்;
மைந்தரும்  -   ஆடவரும்;  ஆரும்  நீங்க  - பிறரும் அந்த
இடத்திலிருந்தும் விலகிச்  செல்ல;  அறிஞரொடு  ஏகினான்-
(மந்திரச் சுற்றம் சார்ந்த) அறிஞர்களோடு சென்றான் இராவணன்.
 

"இளையார்,  ஒன்றும்  முறைமையுணராதவர், மகளிர் என்னும்
இவர்  மந்திரத்தின்  எய்தப்பெறாதவரே"  (வில்லி.  கிருட்.தூ.52)
என்பராதலின்,  "வார்குலாம்  முலைமாதரும்,  மைந்தரும், ஆரும்
நீங்க"  என்றார். முன்பும்  (6077,  6088) கம்பர் கூறியது காண்க.
வருண  தேவன்  இராமனுக்கு  உடந்தையானது போல், வாயுவும்
ஆகக்  கூடும்   என்றஞ்சி,   காற்றையும்   வெளி  நிறுத்தினான்
எனினுமாம்.
 

(40)
 

6786.

உணர்வு இல் நெஞ்சினர், ஊமர், உரைப் பொருள்

புணரும் கேள்வியர் அல்லர், பொறி இலர்,

கொணரும் கூனர், குறளர், கொழுஞ் சுடர்

துணரும் நல் விளக்கு ஏந்தினர், சுற்றினார்.
 

உணர்வில்   நெஞ்சினர்  -  உணரும்   ஆற்றல்   அற்ற
மனத்தினரும்; ஊமர் -  பேச  இயலாதவரும்; உரைப் பொருள்
புணரும்   கேள்வியர்  அல்லர்
-  உரைத்த பொருள் சென்று
சேர்வதற்குரிய   கேள்விச்  செல்வம் பெறாத செவிடரும்; பொறி
இலர்
- வேறு பொறிகளாகிய உறுப்புகள் அற்றவரும்; கொணரும்
கூனர் குறளர்
- வேண்டிய பொருள்களைக் கொண்டுவந்து தரும்
கூனரும்,   குறளரும்;   துணரும்   கொழுஞ்சுடர் நல்விளக்கு
ஏந்தினர்   சுற்றினர் 
-   பல    முகங்களாக      கொழுந்து
விட்டெரிகின்ற   நல்ல  விளக்குகளை  ஏந்தினவர்களாய்  அங்கு
சூழ்ந்து நின்றார்கள்.