ஏவிய அன்றிப் பிறிது ஒன்றுதாமே செய்ய வல்லவர் அல்லர் ஆதலின் கூர் அறிவு குறைந்தவர்கள், ஊமையர், செவிடர் முதலியோர் மந்திராலோசனையில் ஈடுபட்டிருப்போர்க்குக் குற்றேவல் செய்ய அனுமதிக்கப் பட்டனர். |
(41) |
6787. | 'நணியர், வந்து மனிதர்; நமக்கு இனித் |
| துணியும் காரியம் யாது?' எனச் சொல்லினான்- |
| பணியும் தானவர் ஆதியர் பல் முடி |
| மணியினால் விளங்கும் மணித் தாளினான்.* |
| |
பணியும் தானவர் ஆதியர் பல்முடி - (தன்னை) வணங்குகின்ற அசுரர் முதலானோரின் பற்பல மகுடங்களின்; மணியினால் விளங்கும் - மாணிக்கங்களினால் ஒளிவிடுகின்ற; மணித்தாளினான் - அழகிய பாதங்களையுடையவனான இராவணன்; மனிதர் வந்து நணியர் - (நம் பகைவரான) மனிதர்கள் (நம்மை நோக்கி) வந்து அண்மையர் ஆயினர்;நமக்கு இனித் துணியும் காரியம் யாது?- நாம் இனித் துணிந்து ஆற்ற வேண்டிய செயல்கள் யாவை?; எனச் சொல்லினான்- என்று (மந்திரச் சுற்றத்தாரை நோக்கிக்) கேட்டான்.; |
நணிமை - அண்மை. அசுரரும் தேவரும் வந்து வணங்கும் அடியுடையான் 'மனிதர் நணியர்' என அஞ்சி ஆலோசனை கேட்க நேர்ந்துள்ளது என்பது ஒரு நயம். பகைவர் மிக அருகில் உளர் ஆனதனால் தான், இரவில் மந்திராலோசனை அவை கூட்டப்பட்டுள்ளது. என்பதனை உணர்க என்பது குறிப்பு. |
(42) |
மாலியவான் அறிவுரை |
6788. | 'கால வெங் கனல் போலும் கணைகளால் |
| வேலை வெந்து, நடுங்கி, வெயில் புரை |
| மாலை கொண்டு வணங்கினவாறு எலாம் |
| சூலம் என்ன என் நெஞ்சைத் தொளைக்குமால். |
| |
கால வெங்கனல் போலும் - (அப்போது பாட்டனாகிய மாலியவான் இராவணனை நோக்கிக் கூறுவான்) ஊழிக் காலத்துக் கடலிடைத் தோன்றும் கடுந்தீயே போன்று; கணைகளால்- (இராமனின்) அம்புகளால்; வேலை வெந்து நடுங்கி- சமுத்திர ராசனாகிய வருணன் தீப்பட்டு நடுங்கி; வெயில் புரை மாலை கொண்டு- வெயிலைப் போல் ஒளிவிடும் நவமணி |