துடைத்த வானரவீரர்- (உலகிலேயே பெரிய மலைகள் இனி இல்லை என்னுமாறு) செய்து விட்ட குரங்கு இன வீரர்கள்; தம் தோள்களைப் புடைத்த வாறும் - (வெற்றிக் களிப்பால்) தம் தோள்களைக் கொட்டி மகிழ்ந்த செயலும்; புணரியைப் போக்குஅற அடைத்தவாறும் - அவ்வாறு மலைகளைப் பெயர்த்து வந்து இட்டு, மாகடலை இடம் விட்டு நகராதவாறு அடைத்த செயலும்; என் உள்ளத்து அடைத்த - என் உள்ளத்தினை (வேறு எண்ண இயலாத படி) அடைத்துக் கொண்டுள்ளன. |
புணர்தல்- கூடுதல். எல்லா நதிகளும் வந்து கூடுமிடமாதலின், கடல் புணரியெனப் பட்டது. ஓயாமல் அலைந்து, நகர்ந்து கொண்டேயிருக்கும் கடலை அப்புறம் இப்புறம் அசையாமல் சேது நிறுத்தி விட்டது என்பான், "புணரியைப் போக்கு அற அடைத்த வாறும்" என்றான். |
(45) |
6791. | 'காந்து வெஞ் சின வீரர், கணக்கு இலார், |
| தாம் தம் ஆற்றலுக்கு ஏற்ற தரத் தர, |
| வேந்த! வெற்பை ஒருவன் விரல்களால் |
| ஏந்தி இட்டது என் உள்ளத்தின் இட்டதால். |
| |
வேந்த! - (இலங்கை) வேந்தனே!; காந்து வெஞ்சின வீரர் கணக்கு இலார்- கனலும் கொடுஞ்சினமுடைய எண்ணற்ற வானர வீரர்கள்; தாம் தம் ஆற்றலுக்கு ஏற்ற தர, தர - தங்கள் தங்களுடைய ஆற்றலுக்கு ஏற்றவாறு தக்க மலைகளைக் கொண்டு வந்து கொடுக்க, கொடுக்க; வெற்பை- அந்தப் பெரு மலைகளை (யெல்லாம்); ஒருவன் விரல்களால்- (நளன் என்னும்) ஒப்பற்ற வீரன் தன் கைவிரல்களால்; ஏந்தி இட்டது- தாங்கி (தாங்கிக்) கடலில் இட்டது; என் உள்ளத்தின் இட்டது - என் நெஞ்சிலேயே இட்டது போன்றிருந்து என்னை வருத்துகின்றது. |
வந்து வீழ்ந்த மலைகள், வானர வீரர்கள் உடல் வடிவத்துக்கு ஏற்றாற் போலவன்றி, அவர் நெஞ்சுரத்துக்கு ஏற்றாற் போல அமைந்தது என்பார், "தாம் தம் ஆற்றலுக்கு ஏற்ற தரத்தர" என்றார். "தரத்தர" எனும் அடுக்கு விரைவும் பன்மையும் குறித்து நின்றது. |
(46)
|
6792. | 'சுட்டவா கண்டும், தொல் நகர் வேலையைத் |
| தட்டவா கண்டும், தா அற்ற தெவ்வரைக் |
| கட்டவா கண்டும், கண் எதிரே வந்து |
| விட்டவா கண்டும், மேல் எண்ண வேண்டுமோ?' |