பக்கம் எண் :

 ஒற்றுக் கேள்விப் படலம் 469

தொல் நகர் சுட்டவா கண்டும்- நமது தொன்மை வாய்ந்த
பழம்  பதியான  இலங்கையை  (அனுமன்) எரித்தவாறு கண்ணாற்
கண்டிருந்தும்;  வேலையைத்  தட்டவா  கண்டும்  - கடலை
(அணையிட்டுத்)  தடுத்துள்ளவாறும்  கண்டபிறகும்;  தா  அற்ற
தெவ்வரைக் கட்டவா  கண்டும்
- அழிவற்ற (ஆற்றல் பெற்ற)
கரன் முதலிய பகைவர்களை அழித்தவாறு  கண்டபின்னும்; கண்
எதிரே வந்து விட்டவா கண்டும்
- (இத்தனையும் செய்தவர்கள்
இப்போது,  நம்)  கண்ணுக்கெதிரேயே   வந்து   விட்டதனையும்
(கண்ணாரக்)  கண்டும்;   மேல்   எண்ண   வேண்டுமோ? -
(இவ்வளவும்)  கண்டு விட்டபின்) மேலே  (இங்குகூடிச்) சிந்தனை
செய்வதும் தேவைதானோ? (தேவை இல்லை என்றபடி)
 

தா  அற்ற தெவ்வர் - அழிவற்ற ஆற்றல் மிக்க பகைவர்கள்.
அவர்  விராதன்,   கவந்தன்,  கரதூடணர்,  மாரீசன்,   திரிசிரன்
முதலானோர்.  தா -  அழிவு.  தெவ்வர்  -  பகைவர். தட்டல் -
தடுத்தல். கட்டல் - களையெடுத்தல். அழித்தல். இனி, தொன்னகர் 
சூழ்ந்த கடலைச்சுட்டவாறு கண்டும், தடுத்தவாறு கண்டும் எனவும்
உரைக்கலாம்.   அப்போது,   "தொல்நகர்    வேலை"  என்பது, 
மத்திமதீபமாக நிற்கும்.
 

(47)
 

இராவணன் மாலியவானைச் சினத்தல்
 

6793.

என்று தாயைப் பயந்தோன் இயம்பலும்,

தின்று வாயை, விழிவழித் தீ உக,

'நன்று, நன்று! நம் மந்திரம் நன்று!' எனா,

'என்றும் வாழ்தி, இளவலொடு; ஏகு' என்றான்.
 

என்று   தாயைப்   பயந்தோன்  இயம்பலும் - இவ்வாறு
இராவணனின்  தாயைப்  பெற்ற (மாதாமகனே ஆகிய) மாலியவான்
இராவணனிடம் உரைத்த போது; வாயைத்  தின்று- (இராவணன்)
சினத்தால்  உதட்டைக்  கடித்து; விழிவழித்தீஉக  - கண்களின்
வழியாகத்  தீப்பொறி  சிந்த;  'நன்று,  நன்று - 'நல்லது, நல்லது;
நம்மந்திரம் நன்று- நம் மந்திர ஆலோசனை நன்றாக நடக்கிறது?';
எனா  -  என்று  வெகுண்டு; இளவலோடு என்றும் வாழ்தி
'(நீயும்  என்)  தம்பியான    வீடணனோடு   சேர்ந்து    இனிதாக
வாழ்வாயாக இப்போதே செல்' என்றான்.
 

தாயைப்   பயந்தோன்   -   பாட்டன்.   மாலியவான். முன்பு
வெளியேற்றப்  பட்ட   தம்பி    வீடணன்  நினைவுக்கு   வரவே,
"இளவலோடு