பக்கம் எண் :

 ஒற்றுக் கேள்விப் படலம் 471

ஐயனே  என விளித்தது மாலியவானை. கண்மை - கண்ணின்
தன்மையாகிய காட்சி.  இங்குக் கண்ணுக்கு  நேராகக் கண்டதைக்
குறித்தது.   பகைவன்  தீரச்   செயல்   ஒன்றே  ஒன்று மட்டும்
உங்கட்குக்  கண்ணாரக்  கண்ட காட்சியாகத்   தெரிகிறதேயன்றி,
நம்வேந்தன்  புரிந்துள்ள   வீரச்   செயல்கள்   பல   புரியாமற்
போயுள்ளன;  இருக்கட்டும். எட்டுத் திக்குப்  பாலகர்களும்  நம்
வேந்தன்   இணையடியினை   வந்து    இறைஞ்சிய   வண்ணம்
உள்ளார்களே!   அந்த    உண்மை    ஒன்றையாவது    நீங்கள்
உணர்ந்திருக்க வேண்டும் என்று படைத்தலைவன் மொழிகின்றான்.
 

(50)
 

6796.

' "கூசி வானரர் குன்று கொடு இக் கடல்

வீசினார்" எனும் வீரம் விளம்புவாய்;

ஊசி வேரொடும் ஓங்கலை, ஓங்கிய

ஈசனோடும், எடுத்ததும் இல்லையோ?
 

கூசி  -  நீ  வானரர்க்கு  அஞ்சினவனாய்; குன்று கொடு-
மலைகளையெடுத்து;   இக்கடல்   வீசினார்  எனும்   வீரம்
விளம்புவாய்
- (அவ்வானரர்கள்) இக்கடலுள் வீசினர் என்கின்ற
(அவர்) வீரச் செயலையே விளம்பிக் கொண்டுள்ளாய்; ஓங்கலை
- உயர்ந்தோங்கிய  கயிலை  மலையை; ஓங்கிய ஈசனோடும்-
அதன்  உச்சியில்  வீற்றிருக்கும்   சிவபெருமானோடும்;   ஊசி
வேரொடும்
-  அம்  மலையின் ஆணிவேரோடும்;  எடுத்ததும்
இல்லையோ?
- (நம் தலைவன்) இராவணன் எடுத்துள்ளதும் உன்
நினைவுக்கு வரவில்லையோ? (என்றான் படைத் தலைவன்).
 

ஓங்கல்  -  மலை.  ஊசி  - வேர், ஆணிவேர். இராவணன்
கயிலை  எடுத்தது  முன்பும் (2832, 2840, 3360) பல இடங்களில்
புகழப்படும்.  வானரங்கள்  எடுத்தவை  குன்றுகள்; நம் வேந்தன்
எடுத்தது   ஈசனோடு  சேர்ந்த   மலைகட்குத்   தலைவனாகிய
மலையரசனை!; மறந்ததும் எப்படியோ என வியந்துரைக்கின்றான்.
 

(51)
 

6797.

'அது கொடு என் சில? ஆர் அமர் மேல் இனி,

மதி கெடுந் தகையோர், வந்து நாம் உறை

பதி புகுந்தனர்; தம்மைப் படுப்பது ஓர்

விதி கொடு உந்த விளைந்ததுதான்' என்றான்.
 

அது  கொடு  என் சில- 'பகைவர்கள் குன்றுகளை வீசிக்
கடலை    யடைத்து   இலங்கையையடைந்தனர்   எனும்)  அச் 
செய்தியைக் கேட்டு நாம் (அஞ்ச) என்ன உள்ளது?;