பக்கம் எண் :

472யுத்த காண்டம் 

மதிகெடுந்தகையோர்   -  புத்தி   கெட்டதன்மையினர்; ஆர்
அமர்மேல்
- பெரும் போர் புரிவதன்  பொருட்டு; நாம் உறை
பதி  வந்து  புகுந்தனர் 
-  நாம் வாழும்  இலங்கை  மாநகர்
நோக்கி வந்து புகுந்துள்ளனர்; தம்மைக் கெடுப்பது ஓர் விதி
கொடு உந்த
- அது, தம்மைக் கெடுப்பதற்குத் தங்கள் ஒப்பற்ற
கெடுவிதி பின் நின்று (பிடர்) பிடித்துத்தள்ள; விளைந்தது தான்
என்றான்
- நிகழ்ந்த செயலே யாகும் வேறென்ன?' 
  

(52)
  

வந்த ஒற்றர் வாயிலாக, இராவணன் செய்தியறிதல்
 

6798.

முற்றும் மூடிய கஞ்சுகன், மூட்டிய
வெற்று அனல் பொறிக் கண்ணினன், வேத்திரம்
பற்றும் அங்கையினன், படிகாரன், 'இன்று
ஒற்றர் வந்தனர்' என்ன, உணர்த்தினான்.
 

முற்றும் மூடிய கஞ்சுகன்- (இப்போது) (உடல்) முழுவதும்
மூடிய   சட்டையையுடையவனாய்;  வெற்று  அனல் மூட்டிய
பொறிக்   கண்ணினன் 
-   வெறும்  (சினத்)  தீ  மட்டுமே
மூட்டப்பட்டதினால்      எழும்      பொறி        பறக்கும்
கண்ணினையுடையவனாய்; வேத்திரம் பற்றும் அங்கையினன்
- பிரம்பினைப்  பற்றிய கைகளை யுடையவனாய்; படிகாரன் -
வாயிற்   காவலன்   ஒருவன்   (உட்புகுந்து); 'இன்று  ஒற்றர்
வந்தனர்'
- 'இப்பொழுது உளவு அறிபவர் வந்துள்ளனர்';என்று
உணர்த்தினான்
- என்று இராவணனுக்கு அறிவித்தான்.
 

கஞ்சுகன்  -  சட்டையணிந்தவன்.  முன்பு  சமுதாயத்தில்
மேன்மக்கள்          சட்டையணியாமலும்,      கீழ்மக்கள்
சட்டையணிந்தும் இருந்தனர் என்பது  இதனாலும் தெளிவாம்.
(3082)  முன்பும்  உணர்த்தினார்.  வேத்திரம்  -  பிரம்பு. படி
-  வாயில்   படி. அரச  மனையின்  வாயிற்  படியில் காவல்
புரிபவன் ஆதலின் "படிகாரன்" என்றார். "படிகாரர்! எம் வரவு
சொல்லுதிர்   மன்னவற்கே!"   (2102) என்று  முன்பும் வந்தது.
இன்று - இப்பொழுது எனும் பொருளில் வந்தது.
 

(53)
 

6799.

வாயில் காவலன் கூற, வயங்கு எரி
மேய வெங் கண் விறல் கொள் இராக்கதர்-
நாயகன், 'புகுத்து, இங்கு' என, 'நன்று' எனப்
போய், அவன் புகுத்த, புகுந்தார்அரோ.