பக்கம் எண் :

 ஒற்றுக் கேள்விப் படலம் 473

வாயில் காவலன் கூறி  வணங்கலும்- வாயில் காப்போன்
(இவ்வாறு) கூறி வணங்கியபோது; வயங்கு எரி மேய வெங்கண்
விறல்கொள்  -  ஒளிரும்  தீ  எரிவது   போன்ற    கொடிய
கண்களையும் வல்லமையையும் கொண்ட; இராக்கதர் நாயகன்-
அரக்கர்களின் தலைவனான  இராவணன்;'புகுத்து இங்கு' என-
(அவ்வொற்றர்களை), 'இங்கு புகுமாறு  செய்' என்று கூற; நன்று
எனப் போய்
- 'நன்று' என உரைத்துச் சென்று;அவன் புகுத்த
-   வாயிற்காவலன்    அவ்வாறே    புகவிட;   புகுந்தார் -
(அவ்வொற்றர்கள்) உட்புகுந்தனர்.
 

வெங்கண்   -  கொடுமை.  விறல்  - ஆற்றல்.  இராவணன்
கண்களில் கொடுமையே  ஓயாது குடிகொண்டிருத்தலை, "வயங்கு
எரி மேய வெங்கண் இராக்ககதர் நாயகன்" என்றார், பகைமையும்
கேண்மையும் கண் உரைக்கும் (குறள் 709) ஆதலின். 
 

(54)
 

6800.

மனைக்கண் வந்து, அவன் பாதம் வணங்கினார்-
பனைக் கை வன் குரங்கின் படர் சேனையை 
நினைக்கும்தோறும் திடுக்கிடும் நெஞ்சினார்,
கனைக்கும்தோறும் உதிரங்கள் கக்குவார்.
 

பனைக்கை   வன்குரங்கின்  -  பனந்துண்டம்   போன்ற
கைகளையுடைய  வலிய   குரங்குகளினுடைய; படர் சேனையை
- பரந்த  சேனையை; நினைக்கும் தோறும் - எண்ணும்தோறும்;
திடுக்கிடும் நெஞ்சினார் - நடுங்கும் மனத்தவராயும்;கனைக்கும்
தோறும்
- (பேசுதற்குத்  தொண்டையினைச்  சரிசெய்யச்) செரும்
தோறும்; உதிரங்கள்  கக்குவார்  -  (குபுக் கென்று) இரத்தம்
கக்குபவராயும்  உள்ள அவ்வொற்றர்கள்;  மனைக் கண் வந்து-
அரண்மனைக்குள்  நுழைந்து; அவன்  பாதம் வணங்கினார் -
இராவணனின் அடிகளை வணங்கினர்.
 

வானர்கள்  மொத்திய  ஊமைக் காயங்களால் உள்ளுறுப்புகள்
நைந்து,      புண்ணாகி,      இரத்தம்     வயிற்றில்     ஊறிக் 
கொண்டேயிருத்தலால்,  வாய்  திறந்தால்  குருதி  கொப்பளிக்கும்
(மன) ஓவியக் காட்சியைச் சொல்லாற் பிடித்துக் கவிச்சக்கரவர்த்தி,
"கனைக்கும்   தோறும்   உதிரங்கள்  கக்குவார்"  என ஓதியுள்ள
படிமத்தின் அருமையினை ஓதி யுணர்க. 
 

(55)
 

6801.

'வெள்ள வாரி விரிவொடு, அவ் வீடணத் 
தள்ளவாரி நிலைமையும், தாபதர்